இறுதி ஊர்வலத்தின்போது மாலைகளை சாலையில் வீசுவதை தடுக்க கோரிக்கை

Added : செப் 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி--'இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் வீசி எறியப்படும் மாலைகளால் விபத்து அபாயம் ஏற்படுவதால், நெறிமுறைகளை வகுக்க வேண்டும்' என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் ரவி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராமங்களில், சவ ஊர்வலத்தின்போது வாண வேடிக்கை, மேள தாளங்களுடன், இடுகாடு மற்றும்



புதுச்சேரி--'இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் வீசி எறியப்படும் மாலைகளால் விபத்து அபாயம் ஏற்படுவதால், நெறிமுறைகளை வகுக்க வேண்டும்' என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் ரவி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராமங்களில், சவ ஊர்வலத்தின்போது வாண வேடிக்கை, மேள தாளங்களுடன், இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.அமைதியாக செல்ல வேண்டிய ஊர்வலத்தில், மது அருந்திவிட்டு ஆட்டம் - பாட்டத்துடன் செல்கின்றனர். இவை அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் நடக்கின்றன. அப்போது மலர் மாலை, மலர் வளையங்களை சாலைகளிலும், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மீது தாறுமாறாக வீசப்படுகின்றன. இது பல இன்னல்களையும், விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய செயலால் மனித உயிர் பறிக்கப்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே காவல் துறை, இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்போது, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். இதை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X