மீன் வளர்ப்பு மானிய திட்டம் பயன் பெற கலெக்டர் அழைப்பு

Added : செப் 06, 2022 | |
Advertisement
விழுப்புரம்-மீன் வளர்ப்பு, மீன் விற்பனை நிலையம் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கு மானிய திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீன் வளர்ப்பினை ஊக்குவித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த பிரதமர் மீன் வளமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொது பிரிவினருக்கு 40 சதவீதம்.மகளிர், ஆதிதிராவிடர்,



விழுப்புரம்-மீன் வளர்ப்பு, மீன் விற்பனை நிலையம் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கு மானிய திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீன் வளர்ப்பினை ஊக்குவித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த பிரதமர் மீன் வளமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொது பிரிவினருக்கு 40 சதவீதம்.மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 60 சதவீத மானியத்தில், குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், சிறிய அளவிலான மீன் விற்பனை நிலையம் அமைத்து அலங்கார மீன் வளர்ப்பு திட்ட மானியம்.கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுப்பு திட்டம், புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்தல், நன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல்.சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 2022-23ம் ஆண்டு சட்டசபைக் கூட்டத்தில் மீன் வளத்துறை அமைச்சர் அறிவிப்பில், பண்ணைக்குட்டை வளர்ப்பு உள்ளீட்டு பொருட்களுக்கு 50 சதவீத மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் மீன் வளர்ப்பு விவசாயிகள், விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குனர், மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் முகவரியிலும், 04146259329 என்ற தொலைபேசியில் அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X