தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்னைகள்| Dinamalar

தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்னைகள்

Added : செப் 06, 2022 | |
புகழேந்தி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு விழுப்புரம்-விக்கிரவாண்டி தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்னைகள் குறித்து கலெக்டரிடம், எம்.எல்.ஏ., மனு அளித்தார்.தமிழக முதல்வர் அந்தந்த தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்னைகளை கோரிக்கையாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் வழங்க வேண்டும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தினார்.அதன்பேரில், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி


புகழேந்தி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு


விழுப்புரம்-விக்கிரவாண்டி தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்னைகள் குறித்து கலெக்டரிடம், எம்.எல்.ஏ., மனு அளித்தார்.தமிழக முதல்வர் அந்தந்த தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்னைகளை கோரிக்கையாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் வழங்க வேண்டும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தினார்.அதன்பேரில், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கலெக்டர் மோகனை சந்தித்து அளித்துள்ள மனு:அன்னியூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாக மேம்படுத்த வேண்டும்.விக்கிரவாண்டி பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க வேண்டும். வாதானுாரான் வாய்க்காலில் 13 கி.மீ., கரையை மேம்படுத்த வேண்டும். வாக்கூர் மேல்பாதி பம்பையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.வேம்பி ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். திருவாமாத்துார், கல்பட்டு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், கல்பட்டு நத்தமேடு ஏரிக்கரை சாலை இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து சாலையை அகலப்படுத்த வேண்டும்.விக்கிரவாண்டி பேரூராட்சியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும். விக்கிரவாண்டியில் நீதிமன்ற கட்டடம், குடியிருப்பு உள்ளிட்டவைக்கு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பட்ட பணிகளை நிறைவேற்றப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X