சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்

Added : செப் 06, 2022 | |
Advertisement
கண்டமங்கலம்-கொங்கம்பட்டு காலனியில் சாலை வசதி கேட்டு, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் அடுத்த கொங்கம்பட்டு காலனி ஏரிக்கரை சாலையில் 4 தெருக்கள் சாலை வசதியின்றி உள்ளது. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அப்பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.இதனால்,
சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்



கண்டமங்கலம்-கொங்கம்பட்டு காலனியில் சாலை வசதி கேட்டு, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் அடுத்த கொங்கம்பட்டு காலனி ஏரிக்கரை சாலையில் 4 தெருக்கள் சாலை வசதியின்றி உள்ளது. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அப்பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:00 மணியளவில் மடுகரை - கடலுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மறியல் தொடர்ந்தது.அதனைத் தொடர்ந்து, கண்டமங்கலம் சேர்மன் வாசன், பி.டி.ஓ., சண்முகம், ஊராட்சி தலைவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பின், சேறும் சகதியுமான தெருக்களை பார்வையிட்டனர். பின், சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து 12:00 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.


52 பேர் மீது வழக்கு


சாலை மறியலில் ஈடுபட்ட கொங்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், 32; மற்றும் வி.சி., மாவட்ட துணை அமைப்பாளர் தெய்வசிகாமணி, 29; உட்பட 52 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X