பஸ் வசதி இல்லவே இல்ல.. காவிரி குடிநீருக்கும் வழியில்ல...

Added : செப் 06, 2022 | |
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் தீயனூர் ஊராட்சி கிராமங்களில் பஸ் வசதி இன்றியும், காவிரி குடிநீர் கிடைக்காமலும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து சோகத்துடன் காத்திருக்கின்றனர்.தீயனூர் ஊராட்சியில் தீயனூர், தீயனூர் காலனி, கண்ணாபுரம், வேப்பங்குளம், சமத்துவபுரம், வெற்றி நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 600க்கும் மேற்பட்ட
பஸ் வசதி இல்லவே இல்ல.. காவிரி குடிநீருக்கும் வழியில்ல...


பரமக்குடி : பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் தீயனூர் ஊராட்சி கிராமங்களில் பஸ் வசதி இன்றியும், காவிரி குடிநீர் கிடைக்காமலும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து சோகத்துடன் காத்திருக்கின்றனர்.தீயனூர் ஊராட்சியில் தீயனூர், தீயனூர் காலனி, கண்ணாபுரம், வேப்பங்குளம், சமத்துவபுரம், வெற்றி நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

கிராம மக்களின் பிரதான பிரச்சனையாக பஸ் வசதி இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் 3 கி.மீ., நடந்து சென்று மதுரை- ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் பஸ் ஏறும் நிலையில் உள்ளனர். மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்ட காலத்தில் சில நாட்கள் மட்டுமே வந்த நிலையில் அதன் பிறகு சொட்டு நீருக்கும் வழியின்றி போனதால் கிராம மக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர். டேங்கர் லாரி குடிநீரை குடம் ரூ.15 கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.இதற்காக லாரிகளை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்திருந்து தவிக்கின்றனர். கிராம மக்கள் கூறியது:மூர்த்தி, தீயனூர் காலனி: தீயனூர் காலனியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது.

தற்போது ரோடு சேதமடைந்த நிலையில் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. இங்குள்ள பாப்பா ஊரணியை மக்கள் பல காலமாக குளிப்பதற்கு பயன்படுத்தி வரும் நிலையில் தூர்வாரி சீரமைத்து வேலி அமைக்க வேண்டும்.பஸ் வசதி இல்லாததால் அவசர நிலையில் 3 கி.மீ., நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.ராமு, தீயனூர் வடக்கு தெரு: எங்கள் கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைக்காததால் பல நாட்களில் குடம் ரூ.15க்கு விலை கொடுத்து வாங்குகிறோம். ரேஷன் கடை சேதமடைந்து மழை நீர் புகும் நிலையில் பொருட்களை பாதுகாக்க முடிவதில்லை. இங்கு கட்டப்பட்ட ஒரே ஒரு சுகாதார வளாகமும் தண்ணீர் இன்றி பயன்பாடின்றி உள்ளது. இதனால் ஒட்டு மொத்த கிராம மக்களும் சிரமத்தில் உள்ளனர்.சாத்தாயி, தீயனூர் ஊராட்சி தலைவர்: காவிரி கூட்டு குடிநீர் கிடைக்காத நிலையில் கிராம கண்மாயில் உள்ள கிணற்று நீரை பயன் படுத்துகிறோம்.கடந்த ஆண்டு இங்குள்ள ஆழ்குழாய் மூலம் ஆர்.ஓ., சிஸ்டம் அமைக்கப்பட்டு குடம் ரூ. 3க்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தீயனூர் காலனியில் தார் ரோடு

ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.குடியிருப்பில் உள்ள சிமென்ட் ரோடு, சுகாதார வளாகம் மற்றும் உள்ள பணிகளை மேற்கொள்ள நிதி தேவைப்படுகிறது. மேலும் கண்மாயில் இருந்து அரை கி.மீ.,ல் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி இங்குள்ள குழாய்களில் சப்ளை செய்யப்படுகிறது. இடர் தீர்த்த அம்மன் கோயில் ஊரணி சீரமைக்கப்பட்டுள்ளது. குறுங்காடுகள் நல்ல முறையில் வளர்க்கப்பட்டுள்ளன. மக்களின் முக்கிய பிரச்னையாக ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தண்ணீர் தேங்குவதால் சுரங்க ரயில் பாதை வழியாக வர முடிவதில்லை. அதனால் 6 கி.மீ., சுற்றி மெயின் ரோட்டிற்கு செல்லும் நிலை உள்ளது.உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டார் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X