13 போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

Added : செப் 06, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-நகைக் கடை கொள்ளை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு எஸ்.பி., சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரி புதுார் கிராமத்தில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் 7ம் தேதி கடையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் 260.6 கிலோ தங்க நகை, 22 கிலோ வெள்ளி மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ்
13 போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு



கள்ளக்குறிச்சி-நகைக் கடை கொள்ளை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு எஸ்.பி., சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரி புதுார் கிராமத்தில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் 7ம் தேதி கடையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் 260.6 கிலோ தங்க நகை, 22 கிலோ வெள்ளி மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் தலைமையில் 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது தெரிந்தது. இதில், மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், சத்தியசீலன், மாணிக்கம் உட்பட 13 போலீசாரை எஸ்.பி., பகலவன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X