வங்கி கொள்ளை வழக்கில் இன்ஸ்.,சுக்கு ஜாமின் மறுப்பு

Added : செப் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் நகை பட்டறை உரிமையாளருக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துள்ளது.31 கிலோ தங்க நகைகள்சென்னை அரும்பாக்கத்தில், பெடரல் வங்கியின் நகை கடன் வழங்கும் பிரிவு உள்ளது. இங்கு, வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்டிருந்த, 31 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கொள்ளை
வங்கி கொள்ளை வழக்கில் இன்ஸ்.,சுக்கு ஜாமின் மறுப்பு

சென்னை : வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் நகை பட்டறை உரிமையாளருக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துள்ளது.


31 கிலோ தங்க நகைகள்



சென்னை அரும்பாக்கத்தில், பெடரல் வங்கியின் நகை கடன் வழங்கும் பிரிவு உள்ளது. இங்கு, வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்டிருந்த, 31 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அதே வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய முருகன் என்பவர், சிலருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், கோவையைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொள்ளை போன நகைகளில், 3.5 கிலோ நகைகளை, இன்ஸ்பெக்டர் வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

கொள்ளையடித்த நகைகளை உருக்க ஸ்ரீவத்சன் உதவி செய்துள்ளார்.ஜாமின் கோரி, இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள், நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் உதவிபோலீஸ் தரப்பில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, ''கொள்ளையடித்த நகைகளை மறைக்க மனுதாரர்கள் உதவி செய்துள்ளனர். இவ்வழக்கில், விசாரணை இன்னும் முடியவில்லை. நகைகளை இன்னும் மீட்க வேண்டியதுள்ளது. அதனால், ஜாமின் வழங்கக் கூடாது,'' என்றார். இதையடுத்து, இருவரது ஜாமின் மனுக்களையும், நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
06-செப்-202213:33:10 IST Report Abuse
Girija இப்ப்போ கொள்ளை போனது 31 கிலோ தானா? நிதியமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு ஒக்கட்டி ரெக்கட்டி என்று கணக்கு சொல்லி தரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X