இடமலைகுடி ஊராட்சிக்கு முதன்முறையாக காஸ் சிலிண்டர்கள் அனுமதி

Added : செப் 06, 2022 | |
Advertisement
மூணாறு, : மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சிக்கு முதன்முறையாக பத்து சமையல் காஸ் சிலிண்டர்கள் அனுமதிக்கப்பட்டன.மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 26 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மூணாறு ஊராட்சியில் முதலாம் வார்டாக செயல்பட்ட அப்பகுதி 2010ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு



மூணாறு, : மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சிக்கு முதன்முறையாக பத்து சமையல் காஸ் சிலிண்டர்கள் அனுமதிக்கப்பட்டன.மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 26 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மூணாறு ஊராட்சியில் முதலாம் வார்டாக செயல்பட்ட அப்பகுதி 2010ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு முதன்முறையாக தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டு இடமலைகுடி ஊராட்சி என செயல்பட்டு வருகிறது.

அப்பகுதிக்குச் செல்ல ரோடு வசதி இல்லாததால் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. சமீபத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ராஜமலை பெட்டி முடி வனப்பகுதியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள இடலிபாறைகுடி வரை ரோடு அமைக்கப்பட்ட பிறகு அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது.தற்போது மத்திய அரசின் கிரீன் இந்தியா மிஷன் திட்டத்தில் முதல் கட்டமாக பத்து சமையல் காஸ் சிலிண்டர் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.59,625 யை வனத்துறை நிதியில் இருந்து மாற்றப்பட்ட ஆவணங்களை இடலி பாறை ஊர் மூப்பன் (தலைவர்) சுப்புராஜிடம் கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தொடுபுழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வழங்கினார். பெட்டி முடி வரை காஸ் ஏஜென்சி வாகனம் மூலமும், அங்கிருந்து அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகளில் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ரோடு வசிதி உள்ள இடலிபாறை, ஷெட்டுகுடி, அம்பலபடிகுடி ஆகிய பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X