ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா விழாவை தொடங்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சினிமா நடிகர், கல்வியாளர் தாமு, நாளைய தேசம் வகுப்பறையில் என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிந்தைகள் குறித்தும், கல்வியின் அவசியம், ஆசிரியர்கள் சேவை
ஆசிரியர் தினவிழா  கொண்டாட்டம்



ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா விழாவை தொடங்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சினிமா நடிகர், கல்வியாளர் தாமு, நாளைய தேசம் வகுப்பறையில் என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிந்தைகள் குறித்தும், கல்வியின் அவசியம், ஆசிரியர்கள் சேவை குறித்து பேசினார். பேராசிரியர்களுக்கு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் சசிக்கனி தலைமைவகித்தார். தலைமையாசிரியர் ராஜீ உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூங்கொத்து வழங்கினர். ஆசிரியர்களுக்குள் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் (ஓய்வு) ஜலீல் தலைமை வகித்தார். தொண்டி எஸ்.ஐ. விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் மாணிக்கம் வரவேற்றார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் காளிமுத்து நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X