சாலை பணிகள் உதவி இயக்குனர் ஆய்வு

Added : செப் 06, 2022 | |
Advertisement
புவனகிரி-நெடுஞ்சாலைத்துறை சார்பில் புவனகிரி அருகே 5 கோடியே 70 லட்சம் செலவில் இரு இடங்களில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். புவனகிரி- குறிஞ்சிப்பாடி சாலையில் சாலை குறுகலாக இருந்ததால் தற்போது ஐந்தரை மீட்டரில் இருந்து ஏழு மீட்டராக சாலை விரிவாக்கம் மற்றும் 100 மீட்டர் தொலைவிற்கு சாலை ஓர தடுப்பு கட்டை கட்டும் பணி 4 கோடி ரூபாய் செலவில்



புவனகிரி-நெடுஞ்சாலைத்துறை சார்பில் புவனகிரி அருகே 5 கோடியே 70 லட்சம் செலவில் இரு இடங்களில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். புவனகிரி- குறிஞ்சிப்பாடி சாலையில் சாலை குறுகலாக இருந்ததால் தற்போது ஐந்தரை மீட்டரில் இருந்து ஏழு மீட்டராக சாலை விரிவாக்கம் மற்றும் 100 மீட்டர் தொலைவிற்கு சாலை ஓர தடுப்பு கட்டை கட்டும் பணி 4 கோடி ரூபாய் செலவில் சாத்தப்பாடியில் இருந்து நத்தமேடு செக்போஸ்ட் வரை துவங்கியது.சித்தேரியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் புவனகிரி-சாத்தப்பாடி சாலையில் சித்தேரியில் ரூ.1.70 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணிகள் மற்றும் 3 மீட்டர் உயரத்தில் 5 மீட்டர் நீளத்தில் 3 நீர் வழி மதகு கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் ஜெகன்,கீழச்சாவடி ராமமிர்தம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சாலை ஆய்வாளர்கள் சேகர், அன்பரசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X