மீண்டும் துளிர்க்கும் வெடிகுண்டு கலாச்சாரம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
கம்பம், : கம்பம் பள்ளத்தாக்கில் மீண்டும் நாட்டு வெடிகுண்டு புழக்கம் அதிகரித்துள்ளது. போலீசாரின் கடும் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்..கம்பம் அருகே சாதாரண தகராறில் ஆறு வெடிகுண்டுகளை வீசியிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சுருளி அருவியில் வெடிகுண்டு வெடித்தது. அதே காலகட்டங்களில் வனப்பகுதிகளில் மரம்


கம்பம், : கம்பம் பள்ளத்தாக்கில் மீண்டும் நாட்டு வெடிகுண்டு புழக்கம் அதிகரித்துள்ளது. போலீசாரின் கடும் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்..கம்பம் அருகே சாதாரண தகராறில் ஆறு வெடிகுண்டுகளை வீசியிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சுருளி அருவியில் வெடிகுண்டு வெடித்தது. அதே காலகட்டங்களில் வனப்பகுதிகளில் மரம் வெட்டும் சமூக விரோத கும்பல்களிடம் வெடிகுண்டுகள் பயன்பாடு இருந்தது.

தற்போது பன்றி வேட்டை, ஆறுகளில் மீன்களை பிடிக்கவும் வெடிபொருள் பயன்படுத்துகின்றனர். குவாரிகளில் பாறைகளை உடைக்க வெடிபொருள்கள் பயன்பாட்டில் உள்ளது.ஆனால் சாதாரண சண்டைக்கு வெடிகுண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்துவது மோசமான முன்னுதாரணமாகி விடும். எனவே, இந்த விஷயத்தில் போலீசார் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.வெடி பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க கியூ பிரிவு போலீசார் எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை. பிற சப் -டிவிசன்களில் உள்ள அளவில் கூட உத்தமபாளையத்தில் மிக குறைந்தளவு போலீசார் உள்ளனர். இதில் கியூ பிரிவு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X