திண்டுக்கலில் கிரிக்கெட் லீக் போட்டிகள்

Added : செப் 06, 2022 | |
Advertisement
திண்டுக்கல் ; டேக் டி.டி.சி.ஏ. லீக் கிரிக்கெட் போட்டிகள் மாவட்டம் முழுவதும் நடந்துவரும் நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் டிராபி முதல் டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. விக்னேஸ் ஸ்போர்ட் ஜூனியர்சி.சி. அணி 48.3 ஓவரில் 205 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜெயந்த் 42,லட்சுமி நாராயணன் 30, மணிகண்டன் 40 ரன்கள் எடுத்தனர். பாஸ்கரன் 4விக்கெட்டுகளை
திண்டுக்கலில் கிரிக்கெட் லீக் போட்டிகள்



திண்டுக்கல் ; டேக் டி.டி.சி.ஏ. லீக் கிரிக்கெட் போட்டிகள் மாவட்டம் முழுவதும் நடந்துவரும் நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் டிராபி முதல் டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. விக்னேஸ் ஸ்போர்ட் ஜூனியர்சி.சி. அணி 48.3 ஓவரில் 205 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜெயந்த் 42,லட்சுமி நாராயணன் 30, மணிகண்டன் 40 ரன்கள் எடுத்தனர். பாஸ்கரன் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 35.2 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது.

மிதுலேஷ் 65, சிவமுருகன் 32 ரன்கள் எடுத்தனர். மணிகண்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரசித்தி வித்யோதயா டிராபி இரண்டாவது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி ஸ்ரீ.வீ., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. திண்டுக்கல் ஹரிவர்ணா சி.சி. அணி 29.5 ஓவரில் 126 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பெரியமாயன் 43 எடுத்தார். சதீஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேடசந்துார் ஜாஹீர் பிராமிசிங் அணி 25 ஓவரில் 100 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. விஜயராஜ் 34 ரன்கள் எடுத்தார். கவுதம் 3 விக்கெட்டுகள், மோகனசுந்தரம் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பிரசித்தி வித்யோதயா டிராபி இரண்டாவது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி ஸ்ரீ.வீ., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 23.2 ஓவரில் 84 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரமேஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாமியார் தோட்டம் சி.சி. அணி 17 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.திண்டுக்கல் டிராகன்ஸ் டிராபி முதல் டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. நத்தம் என்.பி.ஆர்., சி.சி., அணி 30.5 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மணிகண்டன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர் சி.சி., அணி 36.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X