கள்ளக்குறிச்சியில் புதுமைப் பெண் திட்டம்358 மாணவிகளுக்கு ரூ.1,000 பெற ஆணை

Added : செப் 06, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 358 மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.இத்திட்டத்தை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி., பள்ளி கூட்டரங்கில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.தொடர்ந்து நடந்த
கள்ளக்குறிச்சியில் புதுமைப் பெண் திட்டம்358 மாணவிகளுக்கு ரூ.1,000 பெற ஆணை



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 358 மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.இத்திட்டத்தை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி., பள்ளி கூட்டரங்கில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் பெறுவதற்கான ஆணையை வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், கார்த்திகேயன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:இத்திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில ஊக்குவிப்பதற்காக துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று தற்போது கல்லுாரிகளில் படிக்கும் 358 மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் பெறுவதற்கான வங்கி கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.மாணவிகள், அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி படிப்பு துவக்கம் முதல் படிப்பு முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் பெறலாம்.அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமோ, ஐ.டி.ஐ., படிப்புகளில் சேரும் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள், 6ம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்திருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள்.ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் பயின்றால் முதல் 3 ஆண்டுகளுக்கு பயன்பெறலாம். தொலைதுார கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இத்திட்டத்தின்கீழ் பயன்பெற 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் விண்ணப்பித்து புதுமைப் பெண் திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, அனைத்து ஒன்றிய சேர்மன்கள், அரசு அலுவலர்கள், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X