விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

Added : செப் 06, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ள ரஜினி, படங்களில் நடிப்பதிலும், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். லோக்சபா தேர்தல் மற்றும் ஜெயிலர் பட வேலைகள் ஆரம்பமானதை முன்னிட்டு, ரஜினி குறித்த பேச்சு அதிகம் எழத் துவங்கியுள்ளது.தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினி, 'அரசியலுக்கு வரப்போவதில்லை' என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டசபை தேர்தலின் போதே, ஆதரவு
Rajini, Jailer, ரஜினிகாந்த், ஜெயிலர், ரஜினி ரசிகன், Rajinikanth,ரஜினி,Rajini rasikan,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ள ரஜினி, படங்களில் நடிப்பதிலும், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். லோக்சபா தேர்தல் மற்றும் ஜெயிலர் பட வேலைகள் ஆரம்பமானதை முன்னிட்டு, ரஜினி குறித்த பேச்சு அதிகம் எழத் துவங்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினி, 'அரசியலுக்கு வரப்போவதில்லை' என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டசபை தேர்தலின் போதே, ஆதரவு கேட்ட கமலுக்கு, ரஜினி தரப்பிலான பதில் ஏமாற்றத்தையே தந்தது.

இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் பிரபலங்களின் ஆதரவை பெறுவதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதிலும், ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பதிலும், அவர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதிலும், பா.ஜ.,வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


latest tamil news
'மக்களிடம் இன்றும் நெருக்கமான தொடர்பு கொண்டவர் ரஜினி' என, பா.ஜ.,வினர் பேசத் துவங்கிஉள்ளனர். அதிலும், ரஜினி நடிக்கும் பட வேலை ஆரம்பமாகும்போதும், பட வெளியீட்டின் போதும், அவர் பற்றிய பேச்சு அதிகரிக்கும். அந்த வகையில், ஜெயிலர் பட வேலைகள் துவங்குவதால், தற்போது ரஜினி பற்றிய பேச்சு எழுந்துள்ளது. 'வரும் ஏப்ரலுக்குள், ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்' என, அவரது அண்ணன் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 'கர்நாடக கவர்னராக ரஜினியை அறிவிக்கப் போகின்றனர்' என்ற பேச்சும் பரவி வருகிறது. இப்போதைக்கு, ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகும் வரை, அவர் குறித்த பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-செப்-202220:31:50 IST Report Abuse
Ramesh Sargam இப்பொழுதே அந்த கவர்னர் பதவிக்கு மதிப்பு இல்லை. இதுபோன்று சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அந்த பதவி கிடைத்தால் அல்லது கொடுக்கப்பட்டால் இருக்கிற கொஞ்சநஞ்ச மதிப்பும் போய்விடும். கொடுக்க நினைத்தால் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கொடுங்கள், சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கொடுங்கள், தன்னலம் பாராமல் மருத்துவம் பார்த்த சிறந்த மருத்துவருக்கு கொடுங்கள், சுயநலம் பார்க்காமல், லாபம் எதுவும் இல்லாம பணிபுரியும் தன்னார்வர் ஒருவருக்கு கொடுங்கள். தயவு செய்து சினிமாக்காரர்களுக்கு கொடுக்கவே கொடுக்காதீர்கள்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
06-செப்-202218:20:14 IST Report Abuse
jayvee ரஜினி என்றால் குழப்பம்..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-செப்-202216:38:00 IST Report Abuse
Bhaskaran ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கி பார்த்து சந்தோஷமாககவலைகள்மறைந்து இருங்கன்னுசொல்லப்போறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X