கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம்14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம், தலைவர் சுப்ராயலு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஷமீம்பானு வரவேற்றார். கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார்.நகராட்சி பொறியாளர் முருகன், துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், பணி மேற்பார்வையாளர் முகமது சுபேர், பணி
கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம்14 தீர்மானங்கள் நிறைவேற்றம்



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம், தலைவர் சுப்ராயலு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஷமீம்பானு வரவேற்றார். கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார்.நகராட்சி பொறியாளர் முருகன், துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், பணி மேற்பார்வையாளர் முகமது சுபேர், பணி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 21 வார்டுகளிலும் போர்வெல் மின் மோட்டார்கள், மினி டேங்குகள், சுவிட்சுகள் ஆகியவற்றை பழுதுநீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வருதல். கோமுகி ஆற்றங்கரையில் உள்ள உரக்கிடங்கில் சேகரித்து வைத்துள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்துதல்.குடிநீர் வழங்கல் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்து பணிகளை முழுமைப்படுத்துதல். நகராட்சிக்கு புதிதாக ஜீப்புகள் வாங்குவது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து பணியின் போது இறந்த நகராட்சி துாய்மைப் பணியாளர் கலியன் குடும்பத்தினருக்கு விடுப்பு நிலுவைத் தொகை்யாக 2.96 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X