மாவட்டத்தில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
விருதுநகர் : : விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.விருதுநகர் நோபிள் பள்ளியில் நடந்த விழாவில் சேர்மன் ஜெரால்டு ஞானரத்தினம், செயலர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி நடந்தது. ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளை மாணவர்கள் வழங்கினர். சாத்தூர் ஸ்ரீகரா வித்யா மந்திர் பள்ளியில் தலைவர்



விருதுநகர் : : விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.விருதுநகர் நோபிள் பள்ளியில் நடந்த விழாவில் சேர்மன் ஜெரால்டு ஞானரத்தினம், செயலர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி நடந்தது. ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளை மாணவர்கள் வழங்கினர்.

சாத்தூர் ஸ்ரீகரா வித்யா மந்திர் பள்ளியில் தலைவர் ராஜு தலைமை வகித்தார். தாளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.* சாத்தூர் மேட்டமலை பி.எஸ்.என்.எல்., கல்வியியல் கல்லூரியில் தலைவர் ராஜீ தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.* சிவகாசி ரிசர்வ்லைன் லார்டு பி.சி.ஏ.ஏ., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் ஸ்ரீ கண்ணன், முதல்வர் காளீஸ்வரன் பேசினர். ஆசிரியர் பாண்டி செல்வம் நன்றி கூறினார்.

ராஜபாளையம் வட்டார பள்ளிகளின் தேசிய மாணவர் படை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 5 வது தமிழ்நாடு சைகை அணி சார்பில் கமாண்டர் ரோஹித் கவுர் தலைமை வகித்தார்.பி.எஸ்.கே நகரில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் இருந்து பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் கல்லுாரி வரை நடந்தது.இதில் பி.ஏ.சி.ஆர் மேல்நிலைப்பள்ளி, பாலிடெக்னிக், சேத்துார் சேவுகபாண்டியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாலிடெக்னிக் என்.சி.சி அதிகாரி அனந்த நாராயணன் செய்தார்.* ராஜபாளையம் பிரம்மானந்த பஜனை மடத்தில் முன்னாள் மாணவர் வெங்கட பெருமாள் வரவேற்றார். தணிகாசல ராஜா தலைமை வகித்தார். திருப்பதி யார்ன்டெக்ஸ் மேலாளர் அண்ணாமலை விளக்கி பேசினார். சேக்கிழார் மன்ற அறக்கட்டளை தலைவர் பூமிநாதன் வாழ்த்தினார். ஆசிரியர்களுக்கு மாப்பிள்ளை விநாயகர் மன்றம் சார்பில் ராமராஜ், முன்னாள் மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

ஏற்பாடுகளை ஜெய குரு ராஜா, குரு தேவா செய்தனர்.*ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் ஆனந்தி தலைமை வகித்து பேசினார். பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ரமணி, கீதா, அலுவலர் வெங்கட பெருமாள் கலந்து கொண்டனர்.* சத்திரப்பட்டி பாலகிருஷ்ணா கல்லுாரியில் தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். முதல்வர் அருண் முன்னிலை வகித்தார்.கலவரங்கள் நடந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X