நீட் விடைத்தாள் மாற்றம்; ஐகோர்ட்டில் மாணவி வழக்கு| Dinamalar

'நீட்' விடைத்தாள் மாற்றம்; ஐகோர்ட்டில் மாணவி வழக்கு

Added : செப் 06, 2022 | |
சென்னை : மருத்துவப் படிப்பில் சேருவதற்கான 'நீட்' எனப்படும் தகுதித் தேர்வில் விடைத்தாள் மாற்றப்பட்டு இருப்பதாகவும் அசல் விடைத்தாளை அளிக்கவும் கோரி ஒரு மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை வேளச்சேரியை சேர்ந்த பவமிர்த்தினி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:ஜூலையில் நடந்த நீட் தேர்வில் பங்கேற்றேன். ஆகஸ்ட் 31ல்
'நீட்' விடைத்தாள் மாற்றம்; ஐகோர்ட்டில் மாணவி வழக்கு

சென்னை : மருத்துவப் படிப்பில் சேருவதற்கான 'நீட்' எனப்படும் தகுதித் தேர்வில் விடைத்தாள் மாற்றப்பட்டு இருப்பதாகவும் அசல் விடைத்தாளை அளிக்கவும் கோரி ஒரு மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த பவமிர்த்தினி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:ஜூலையில் நடந்த நீட் தேர்வில் பங்கேற்றேன். ஆகஸ்ட் 31ல் தேர்வு முடிவு வந்தது. விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களுக்கு ஓ.எம்.ஆர். 'ஷீட்' நகலும் வழங்கப்பட்டது.எனக்கு வழங்கப்பட்ட ஓ.எம்.ஆர். ஷீட் நான் எழுதியது அல்ல; 180 கேள்விகளில் 167க்கு பதில் அளித்திருந்தேன்.அதில் 13 கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டேன். ஆனால் எனக்கு வழங்கப்பட்ட ஓ.எம்.ஆர். ஷீட்டில் 60 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்றேன். 603 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு 132 மதிப்பெண் மட்டுமே வந்தது. எனவே நான் தேர்வு எழுதிய அசல் விடைத்தாளை வழங்கினால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க என்னை அனுமதிக்க வேண்டும். ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆர்.சுப்ரமணியனிடம் வழக்கறிஞர் சரவணன் முறையிட்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X