வறண்ட கண்மாய்; பயன்படாத பஸ் ஸ்டாண்ட்

Added : செப் 06, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டைஅருகே பந்தல்குடி ஊராட்சியில் பராமரிப்பு இன்றி வறண்டு போன கண்மாய், இருந்தும் செயல்படாத பஸ் ஸ்டாண்ட் என பல்வேறு சிரமத்திற்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பந்தல்குடி ஊராட்சி, இதில் வெள்ளையாபுரம் தெரு, லிங்காபுரம் தெரு, சூரப்ப நாயக்கன்பட்டி தெரு, மேட்டுப்பட்டி தெரு, அண்ணா நகர், சாந்தி
வறண்ட கண்மாய்; பயன்படாத பஸ் ஸ்டாண்ட்



அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டைஅருகே பந்தல்குடி ஊராட்சியில் பராமரிப்பு இன்றி வறண்டு போன கண்மாய், இருந்தும் செயல்படாத பஸ் ஸ்டாண்ட் என பல்வேறு சிரமத்திற்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பந்தல்குடி ஊராட்சி, இதில் வெள்ளையாபுரம் தெரு, லிங்காபுரம் தெரு, சூரப்ப நாயக்கன்பட்டி தெரு, மேட்டுப்பட்டி தெரு, அண்ணா நகர், சாந்தி நகர், காமாட்சி நகர்,விநாயகா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. புறநகர் பகுதிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.

விநாயகா நகரில் பல ஆண்டுகளாக ரோடுகள், வாறுகால் வசதி இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். பந்தல்குடியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக செயல்பாடு இல்லாமலேயே உள்ளது.முன்பு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த பஸ் ஸ்டாண்ட் வழியாக வந்து செல்லும். அதே போன்று மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்களும் இங்கு நின்று தான் செல்லும். முக்கிய சந்திப்பாக இருந்த பஸ் ஸ்டாண்ட் தற்போது நான்கு வழி சாலை அமைக்கப்பட்டதால் அனைத்து பஸ்களும் பைபாஸ் ரோட்டிலேயே சென்றுவிடுகிறது.ஊருக்குள் எந்த பஸ்சும் வருவது இல்லை.

இதனால் பஸ் ஸ்டாண்ட் இருந்தும், மக்கள் ஆங்காங்கு ரோட்டில் நின்று தான் பஸ்கள் ஏற வேண்டியுள்ளது. முக்கிய பிரச்சனையாக பந்தல்குடியில் இருந்து மதுரைக்கு செல்ல ஊருக்குள் பஸ்கள் வருவதில்லை.பந்தல்குடியில் உள்ள பெரிய கண்மாய் முன்பு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக இருந்தது. பராமரிப்பு இன்றி போனதால் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கண்மாயில் தண்ணீர் வருவதில்லை. நீர்வரத்து வழிகள் அடைபட்டும், கண்மாயின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது. தற்போது கண்மாய் குடிமகன்களின் பாராக செயல்பட்டு வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.பந்தல்குடி பஜார் பகுதியில் உள்ள நாச்சியார் ஊரணி பராமரிப்பின்றி கழிவு நீர் குளமாக மாறிவிட்டது. ஊரில் உள்ள முக்கியமான ஓடைகள், வாறு கால்கள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.


இங்குள்ள பெரிய கண்மாய் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது. விவசாயத்திற்கும் பயன்பட்டு வந்தது. நான்கு வழிச்சாலை துவங்கப்பட்ட போது மழை நீர்வரத்து ஓடைகள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. இதனால் கண்மாய்க்குள் மழை நீர் வர முடியாமல் வறண்டு கிடக்கிறது.- சுப்புராஜ், விவசாயி.பந்தல்குடியில் பஸ் ஸ்டாண்ட் இருந்தும் பல ஆண்டுகளாக பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் வருவது இல்லை. மதுரை, தூத்துக்குடி பஸ்கள் பந்தல்குடி வழியாக செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராாட்சி நிர்வாகமும் இதில் முனைப்பு காட்டி பஸ்கள் வர முயற்சி எடுக்க வேண்டும்.- வேலுச்சாமி, விவசாயி.

பஸ்கள் வர வேண்டும்



பஸ்கள் வர வேண்டும்

வேலுச்சாமி, விவசாயி : பந்தல்குடியில் பஸ் ஸ்டாண்ட் இருந்தும் பல ஆண்டுகளாக பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் வருவது இல்லை. மதுரை, தூத்துக்குடி பஸ்கள் பந்தல்குடி வழியாக செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராாட்சி நிர்வாகமும் இதில் முனைப்பு காட்டி பஸ்கள் வர முயற்சி எடுக்க வேண்டும்.



வளர்ச்சிப் பணிகள் செய்யப்படும்



பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்ல நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் தான் மனசு வைக்க வேண்டும். பஸ்ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்ல அறிவுறுத்த வேண்டும். பெரிய கண்மாயை தூர்வார அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புறநகர் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய 6 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம். ஒதுக்கீடு செய்தவுடன் பணிகள் துவங்கும்.-- பாலாஜி பத்ரிநாத், ஊராட்சி தலைவர்.அரசு ஒதுக்கும் நிதிகளை வைத்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம். ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்களை தூர்வார அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பொது நிதியிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் செய்யப்படும்.- சசிகலா, தலைவர், அருப்புக்கோட்டை ஒன்றியக்குழு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X