வனப்பகுதியில் பாதுகாப்பு கவசத்துடன் மின் கம்பி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Added : செப் 06, 2022 | |
Advertisement
சென்னை : தமிழக வனப் பகுதிகளில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, பாதுகாப்பு கவசத்துடன் கூடிய கம்பிகளாக மாற்ற, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. யானைகள், ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க, ரயில்வே துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வனப்பகுதியில் பாதுகாப்பு கவசத்துடன் மின் கம்பி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை : தமிழக வனப் பகுதிகளில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, பாதுகாப்பு கவசத்துடன் கூடிய கம்பிகளாக மாற்ற, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. யானைகள், ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க, ரயில்வே துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுகுறித்த அறிக்கையை, ரயில்வே சார்பில் வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் தாக்கல் செய்தார்.அறிக்கையில், 'வாளையார் - எட்டிமடை ரயில்வே பாதையில், இரண்டு இடங்களில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி, கன மழை காரணமாக மெதுவாக நடக்கிறது.

மழை ஓய்ந்த பின், பணிகள் தீவிரமடையும். பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்' என கூறப்பட்டுள்ளது.ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், ''நீதிமன்றத்தின் கண்காணிப்பாலும், ரயில்வே தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாலும், 2021 டிசம்பருக்கு பின், ரயிலில் யானைகள் அடிபட்டு இறக்கவில்லை. ஒரு கி.மீ., துாரத்துக்கு, 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஒரு கி.மீ.,க்கு கேமராக்கள் பொருத்தப்படும்,'' என்றார்.

இதையடுத்து, 'வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, பாதுகாப்பு கவசத்துடன் கூடிய கம்பிகளாக மாற்றுவதால், யானைகளும், பிற விலங்குகளும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தவிர்க்க முடியும்' என்ற நீதிபதிகள், இதுகுறித்து, அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X