மாமல்லை - புதுச்சேரி தடத்தில் சுங்கச்சாவடி அகற்றம்

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மாமல்லபுரம்: மாமல்லபுரம் - புதுச்சேரி வழித்தடத்தில் சுங்க கட்டண வசூல் கைவிடப்பட்டதை அடுத்து, சுங்கச்சாவடிகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.சென்னை - புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சுங்க கட்டண சாலையாக, 20 ஆண்டுகளாக நிர்வகித்து பராமரித்தது. இத்தடத்தில் உள்ள மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாடால், 2018ல், சென்னை அக்கரை -

மாமல்லபுரம்: மாமல்லபுரம் - புதுச்சேரி வழித்தடத்தில் சுங்க கட்டண வசூல் கைவிடப்பட்டதை அடுத்து, சுங்கச்சாவடிகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.

சென்னை - புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சுங்க கட்டண சாலையாக, 20 ஆண்டுகளாக நிர்வகித்து பராமரித்தது. இத்தடத்தில் உள்ள மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாடால், 2018ல், சென்னை அக்கரை - மாமல்லபுரம் பகுதி மட்டும், நான்குவழிப் பாதையாக மேம்படுத்தியது.



latest tamil news




இதற்கிடையே, தடத்தின் மாமல்லபுரம் - புதுச்சேரி, 95 கி.மீ., பகுதியை, 2018ல் தேசிய நெடுஞ்சாலை '332ஏ' என, மத்திய அரசு மாற்றியது. பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தில், இத்தடத்தில், முதலில், மாமல்லபுரம் - முகையூர், 31 கி.மீ., பகுதி, 675 கோடி ரூபாய் மதிப்பில், நான்குவழிப் பாதையாக மேம்படுத்த, தற்போது பணிகள் நடக்கின்றன.

அடுத்து, முகையூர் - மரக்காணம், 31 கி.மீ., பகுதி, 595 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இறுதியாக, மரக்காணம் - புதுச்சேரி, 45 கி.மீ., பகுதி மேம்படுத்தப்படும்.சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கும் நிலையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், கட்டணத்தையும் உயர்த்தி, தொடர்ந்து வசூலித்தது.

இத்தடத்தில் சாலையும் சீரழிந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையில், கட்டண வசூல் சர்ச்சையானது. மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதி சுங்க கட்டணத்தை கைவிடுமாறு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தி, ஆக., 4 முதல் கைவிடப்பட்டது.மாமல்லபுரத்தில் உள்ள இரண்டு, வெங்கப்பாக்கத்தில் உள்ள ஒன்று என, மூன்று சுங்கச்சாவடி மையங்களை அகற்றும் பணியை, சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் நேற்று துவக்கினர்.
சென்னை - மாமல்லபுரம் பகுதி, உத்தண்டி சுங்கச்சாவடி, சாலை மேம்பாட்டு நிறுவனத்திடமே உள்ளதால், இப்பகுதிக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X