கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது

Added : செப் 06, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை : கள்ளச்சாராய ஊறல் போட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். சீகம்பட்டியில் நடத்திய சோதனையில், ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்த போலீசார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8



புதுக்கோட்டை : கள்ளச்சாராய ஊறல் போட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். சீகம்பட்டியில் நடத்திய சோதனையில், ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்த போலீசார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 250 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர்.கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், 34; பெருமாள், 50; கண்ணகி, 46; மகேஸ்வரி,45, மற்றும் சதீஷ்குமார், 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X