சிட்டி ஸ்போர்ட்ஸ் | Dinamalar

சிட்டி ஸ்போர்ட்ஸ்

Added : செப் 06, 2022 | |
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த மேலுார் கல்வி மாவட்டம் கருப்பாயூரணி குறுவட்ட பள்ளிகளுக்கான தடகளப் போட்டியை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா துவக்கி வைத்தார்.மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் குறுவட்ட கொடியையும், உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் பள்ளிக் கொடியை ஏற்றினர். விளையாட்டு அலுவலர் ராஜா ஒலிம்பிக் தீபத்தை துவக்கி வைத்தார். அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி தாளாளர்
சிட்டி ஸ்போர்ட்ஸ்



மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த மேலுார் கல்வி மாவட்டம் கருப்பாயூரணி குறுவட்ட பள்ளிகளுக்கான தடகளப் போட்டியை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா துவக்கி வைத்தார்.மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் குறுவட்ட கொடியையும், உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் பள்ளிக் கொடியை ஏற்றினர். விளையாட்டு அலுவலர் ராஜா ஒலிம்பிக் தீபத்தை துவக்கி வைத்தார். அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி காமாட்சி, முதல்வர் ராமச்சந்திரன், உடற்கல்வி இயக்குனர் சிவகுரு ராமன் ஏற்பாடுகளை செய்தனர்.


14 வயது தடகளப்போட்டி முடிவுகள்


மகளிர் 80 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் அண்ணாமலையார் பள்ளி அபிஸ்ரீ, இதே பள்ளி மாணவிகள் வரீனா பானு 600 மீ., ஓட்டத்திலும், நீளம் தாண்டுதலில் ஸ்ரீநிதி முதலிடம் பெற்றனர். குண்டு எறிதலில் மகாத்மா மெட்ரிக் கனிகா, உயரம் தாண்டுதலில் இளமனுார் ஆதிதிராவிடர் பள்ளி மாணவி ராஜலட்சுமி முதலிடம் பெற்றனர். ஆடவர் பிரிவில் அண்ணாமலையார் பள்ளி மாணவர்களான சீமான் விக்ரம் 80 மீ., 100 மீ., தடைதாண்டும் ஓட்டங்களிலும், குண்டுஎறிதலில் விஷ்ணுபாண்டி, 400 மீ., ஓட்டத்தில் விஸ்வஜித், 600 மீ., ஓட்டத்தில் அஸ்வின் கிருஷ்ணா முதலிடம் பெற்றனர்.


17 வயது பிரிவு


ஆடவர் குண்டுஎறிதலில் கல்யாணி பள்ளி கிருபாகரன், 800 மீ., ஓட்டத்தில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி மாணவர் வேலன்குமார், அண்ணாமலையார் பள்ளி மாணவர்கள் விபின் 3000 மீ., ஓட்டம், ராஜபாண்டி போல்வால்ட் மற்றும் கிேஷார் 100 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் முதலிடம் பெற்றனர். 1600 மீ., தொடர் ஓட்டத்தில் கல்யாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தருண், சந்துரு, விஷால், தங்கபாஸ்கரன்பாபு முதலிடம் பெற்றனர்.மகளிர் பிரிவில் கல்யாணி பள்ளி மாணவிகள் கனிஷ்கா 1500 மீ., ஓட்டம், போல்வால்ட்டில் சந்தியா, குண்டுஎறிதலில் ரோஷினி, 800 மீ., ஓட்டத்தில் ஹர்ஷினி, ஈட்டி எறிதலில் பிருந்தாதேவி முதலிடம் பெற்றனர். உயரம் தாண்டுதலில் இளமனுார் ஆதிதிராவிடர் பள்ளி நதியா, நீளம் தாண்டுதலில் அப்பர் பள்ளி பாவனா, 100 மீ., ஓட்டத்தில் அண்ணாமலையார் பள்ளி ரித்திகா, 3000 மீ., ஓட்டத்தில் ஆண்டார்கொட்டாரம் அரசுப் பள்ளி அனிதா முதலிடம் பெற்றனர். 1600 மீ., ஓட்டத்தில் அப்பர் பள்ளி மாணவிகள் வினோதினி, ஆனந்தி, ருத்ரா, சந்தியா என்ற நாகமணி முதலிடம் பெற்றனர்.


19 வயது பிரிவு


ஆடவர் பிரிவு போல்வால்ட்டில் அண்ணாமலையார் பள்ளி நிதிஷ்குமார், 800 மீ., ஓட்டத்தில் கல்யாணி பள்ளி ராகுல் கண்ணன், குண்டு எறிதலில் அருள்மலர் மெட்ரிக் பள்ளி ஜெபின் ஜோசப், 3000 மீ., ஓட்டத்தில் பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி ஷாருன் சரவணன், 110 மீ., ஓட்டத்தில் அண்ணாமலையார் பள்ளி நோவா ராஜரஜினி செல்வா, 1500 மீ., ஓட்டத்தில் பஸ்கோஸ் பள்ளி விஷால், 400 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் கல்யாணி பள்ளி இப்ராஹிம் முதலிடம். 1600 மீ., தொடர் ஓட்டத்தில் அண்ணாமலையார் மாணவர்கள் சுதர்சன், ஆதித்யன், நிதிஷ்குமார், ரூபன் முதலிடம் பெற்றனர்.மகளிர் பிரிவு 110 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் கல்யாணி பள்ளி ஷாலினி, 800 மீ., ஓட்டத்தில் எல்.பி.என். பள்ளி காத்தம்மாள், 400 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் கல்யாணி பள்ளி லட்சுமி, நீளம் தாண்டுதலில் களிமங்கலம் அரசுப் பள்ளி பர்வீன் பானு, குண்டு எறிதலில் கல்யாணி பள்ளி சுடர்தர், 1500, 3000 மீ., ஓட்டங்களில் அப்பர் பள்ளி நிதிஷா லட்சுமி, போல் வால்ட்டில் அண்ணாமலையார் பள்ளி சுபஸ்ரீ, உயரம் தாண்டுதலில் அண்ணாமலையார் பள்ளி பூஜா, 1600 மீ., தொடர் ஓட்டத்தில் அப்பர் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X