பிரசவ வலியை குறைக்கும் பிரத்யேக யோகா: மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | |
Advertisement
மதுரை: சுகப் பிரசவத்தை அதிகரிக்கும் வகையில், மதுரை அரசு மருத்துவமனையின், யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வுத்துறையின் கீழ், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுவதால், அறுவை சிகிச்சை சதவீதம் குறைந்துள்ளது.மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 40 சுகப்பிரசவம், 10 அறுவை சிகிச்சை நடக்கிறது. மிகவும் சிக்கலான நிலையில் உள்ள கர்ப்பிணிகள் பிற மாவட்டத்தில் இருந்து இங்கு

மதுரை: சுகப் பிரசவத்தை அதிகரிக்கும் வகையில், மதுரை அரசு மருத்துவமனையின், யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வுத்துறையின் கீழ், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுவதால், அறுவை சிகிச்சை சதவீதம் குறைந்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 40 சுகப்பிரசவம், 10 அறுவை சிகிச்சை நடக்கிறது. மிகவும் சிக்கலான நிலையில் உள்ள கர்ப்பிணிகள் பிற மாவட்டத்தில் இருந்து இங்கு சேர்க்கப்படுகின்றனர். இவர்களைத் தவிர பெரும்பாலும் சுகப்பிரவசமாக நடப்பதற்காக மகப்பேறு வார்டிலேயே கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.latest tamil news
இதுகுறித்து இயற்கை நல்வாழ்வு மருத்துவர் நாகராணி நாச்சியார் கூறியதாவது:
கர்ப்பம் தரித்தது முதல் பெண்களுக்கு பயமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். அதை குறைப்பதே முதல் முயற்சி. முதல் 3 மாதங்கள் எளிதான பயற்சி அளிக்கிறோம். 3 - 6 மாதங்களில் குழந்தை நன்றாக உருவாகி விடும் போது அதற்கேற்ப கூடுதல் ஆசனங்களை செய்ய வைக்கிறோம். 6 - 9 மாதங்களில் இடுப்பெலும்பை விரிவு படுத்துவதற்கான யோகா, பதட்டம், பயத்தை குறைக்க மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சி அளிக்கிறோம்.

உணவிலும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி உணவுகளை குறைத்து விட்டு பழம், காய்கறி, கீரை வகைகளை அதிகம் சாப்பிட உணவு அட்டவணை வழங்குகிறோம். ஜூஸ் அல்லது தண்ணீராக தினமும் 3 லிட்டர் குடித்தால் கர்ப்பப்பையில் குழந்தைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

யோகாசனம், உணவு, தண்ணீர், மூச்சுப்பயிற்சி, தியானத்தை கடைப்பிடித்தால் சுகப்பிரசவத்திற்கான சதவீதம் அதிகமாகும். மகப்பேறு வார்டில் வாரத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாளும், இயற்கை நல வார்டிலும் யோகா பயிற்சி அளிக்கிறோம். சுகப்பிரசவம் ஆவதும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X