சரியான பதிலடி... வாயை கொடுத்து உதயநிதி வாங்கி கட்டிக்கணுமா?

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'கொரோனாவை விட கொடூரமான பா.ஜ.,வை, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்' என, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி கூறியுள்ளார். தடுப்பூசியை கொண்டு கொரோனாவையே விரட்டியடித்த பா.ஜ.,வை, ஊழல் வைரஸ்களால் விரட்டியடிக்க முடியாது.சரியான பதிலடி... வாயை கொடுத்து உதயநிதி வாங்கி கட்டிக்கணுமா?ஹிந்து மக்கள்
நாராயணன் திருப்பதி, அர்ஜுன் சம்பத்,உதயநிதி, அமைச்சர் சுப்பிரமணியன், Narayanan Tirupati, Arjun Sampath, minister Subramanian, ப குமார், Udayanidhi,

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'கொரோனாவை விட கொடூரமான பா.ஜ.,வை, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்' என, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி கூறியுள்ளார். தடுப்பூசியை கொண்டு கொரோனாவையே விரட்டியடித்த பா.ஜ.,வை, ஊழல் வைரஸ்களால் விரட்டியடிக்க முடியாது.

சரியான பதிலடி... வாயை கொடுத்து உதயநிதி வாங்கி கட்டிக்கணுமா?


ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேச்சு: தமிழகத்தில் வாரிசு அரசியலை, பா.ஜ., வின் அண்ணாமலை எழுச்சியுடன் அகற்றுவார். தமிழகத்தில் மீண்டும் பழனி சாமி ஆட்சி வரவேண்டும். ராகுல் கன்னியாகுமரியில் துவங்கும் பாத யாத்திரையின் போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, 'கோ பேக் ராகுல்' என்ற இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி நடத்தும்.

யாரை எதிர்த்தால், பிரபலமாவோம் என்பதை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க!


பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேச்சு: ஒரு கட்டடம் சிறப்பாக வர, அனைத்து மதத்திலும் பிரார்த்தனை செய்வது இயல்பு. ஹிந்து மதத்தில் மட்டுமே, ஹோமம் வளர்ப்பர். அதையும், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் தடுக்கிறார். ஹிந்துக்களின் நம்பிக்கையை விமர்சிப்பது, மற்ற மதத்தினரை ஹிந்துக்களுக்கு எதிராக துாண்டி விடுவது தான், தி.மு.க.,வினர் வேலை. அக்கட்சிக்கு ஹிந்துக்கள் ஓட்டளிக்கவில்லையா?

ஹிந்துக்கள் ஓட்டுகளை வாங்கித் தானே, ஆட்சியில் அமர்ந்திருக் காங்க... தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் வேலையை தான், தி.மு.க.,வினர் செஞ்சிட்டு இருக்காங்க!


மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனைகளில் தான் சுகப்பிரசவம் வாயிலாக, அதிகளவு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. தனியார் மருத்துவமனை களில் பெரும்பாலும், 'சிசேரியன்' கள் தான் நடந்துள்ளன. அவர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். தமிழகத்தில், 'சிசேரியன்' இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது தான், அரசின் தொடர் விருப்பம். சுகப்பிரசவம் வேண்டுமா... சிசேரியன் வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


latest tamil news



தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிரசவங்கள் நடக்காமல் தடுக்க, அமைச்சர் என்ற முறையில் அறிவுறுத்தினா மட்டும் போதுமா?


அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் ப.குமார் பேட்டி: ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற பின்தங்கிய மாநிலங்களே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளன. எனவே, அனைத்து துறையிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ, அரசுப் பணியாளர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம் என்பதை முதல்வர் கவனத்தில் கொண்டு, பழைய ஓய்வூதிய அறிவிப்பை வெளியிடுவார் என, நம்புகிறோம்.

நம்புங்க... நல்லா நம்புங்க... நம்பிக்கை தானே வாழ்க்கை!



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
06-செப்-202219:33:49 IST Report Abuse
ANANDAKANNAN K எந்த மாநிலம் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால், அந்த மாநிலம் கடன் கார மாநிலம் தான் ஆகும், ஒரு மாசமா மெட்ராஸ் என்ற சென்னை மழைவெள்ளத்தில் சிக்கி உணவு, உடை, மின்சாரம்,காய்கறி,தானியம்,குடி நீர்,வாழ்வாதாரம் இழப்பு, வேலை இல்லாமை, இப்படி இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் நடந்ததே அதையும் இங்கு பதிவு செய்தால் நல்லது, ஊழலின் ஊற்றுக்கண் திராவிட கட்சிகள்தான் என்று சொல்லுங்கள் உங்களை பாரட்டலேமே, அது என்ன உங்கள் கண்ணுக்கு பிஜேபி ஆளும் மாநிலம் மட்டும் தெரியுது, வீராணம் ஊழல்,காற்றில் ஊழல்,சர்க்கரை எலி சாப்பிட ஊழல்,மேம்பாலம் ஊழல்,பீ எஸ் ன் ல் கேபிள் கனக்சன் ஊழல்,சுடுகாடு கொட்டகை ஊழல், டான்சி ஊழல்,ஊழல் தலைவி மேல் இருப்பது ஊழல் வழக்கு, செத்ததால் வழக்கில் இருந்து விடுவிப்பு,ஊழல் செய்யப்பட்டதால் ஆட்சி டிஸ்மிஸ், இதையெல்லாம் முதலில் இங்கு விலாவரியாக பேசுங்கள் திராவிட ஆதரவாளர்களே, அப்பறம் போகலாம் வேறு மாநில பிரச்சனைகளுக்கு, அதிமுக ஆட்சியில் எதை தொட்டாலும் போராட்டம் நடைதிய போலி போர்வை கொண்ட போராளிகள் எங்கே போனார்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் போராட்டம் என்ற செய்தியே காணேம் அதுவும் போராளிகள் சைடில் இருந்து, இதுக்கு எல்லாம் பதில் உங்கள் இடத்தில இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
06-செப்-202218:41:04 IST Report Abuse
T.sthivinayagam ஹிந்து மக்கள் கட்சி தலைவருக்கு சமஸ்கிருதம் தெரியுமா.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-செப்-202218:36:47 IST Report Abuse
Natarajan Ramanathan ஊத்தநிதி இந்த கருத்தை எப்படி ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பேசலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X