சிறந்த முன்னுதாரணமாக திகழணும்!

Added : செப் 06, 2022 | |
Advertisement
''புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவியர், நன்றாக படித்து, சமுதாயத்தில் சிறந்த முன்னுதாரணமாக திகழ வேண்டும்,'' என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.அரசு பள்ளிகளில் படித்து, உயர் கல்வி படிக்கும் மாணவியருக்கு, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு, புதுமைப்பெண் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்.நாமக்கல்

''புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவியர், நன்றாக படித்து, சமுதாயத்தில் சிறந்த முன்னுதாரணமாக திகழ வேண்டும்,'' என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.
அரசு பள்ளிகளில் படித்து, உயர் கல்வி படிக்கும் மாணவியருக்கு, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு, புதுமைப்பெண் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்.
நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடந்த திட்ட துவக்க விழாவுக்கு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., பொன்னுசாமி, நகராட்சி சேர்மன் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம்., கார்டை வழங்கி பேசியதாவது:
கல்லுாரியில் மாணவிகள் தொடர்ந்து படிக்க, புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். தி.மு.க., அரசு மட்டும் அல்ல, திராவிட இயக்கமே, பெண்களுக்கு இந்த சமுதாயத்தில், சம உரிமையை பெற்றுத் தரும் சிறந்த இயக்கமாகவும், சம நிலையை ஏற்படுத்தி தரும்
இயக்கமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டம் மூலம் உதவிபெறும் மாணவியர், நன்றாக படித்து, சமுதாயத்தில் சிறந்த முன்னுதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்
விழாவில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் படிக்கும், 844 மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில், வங்கி ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X