தீக்குளிப்பு முயற்சி இல்லாமல் மக்கள் குறைதீர் கூட்டம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தை தடுக்க, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு, பலன் கிடைத்தது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கீழ் நிலை அதிகாரிகள் மெத்தனம், போலீஸ் நடவடிக்கையில் குறைபாடு, இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் போன்றவற்றால் பாதிக்கும் மக்கள், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தை தடுக்க, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு, பலன் கிடைத்தது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கீழ் நிலை அதிகாரிகள் மெத்தனம், போலீஸ் நடவடிக்கையில் குறைபாடு, இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் போன்றவற்றால் பாதிக்கும் மக்கள், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த கூட்டத்துக்கு மனு தர வருகின்றனர். ஆனாலும், பலருக்கு தீர்வு கிடைக்காததால், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடுவது, சமீப காலமாக வழக்கமாகி விட்டது. தீக்குளிப்பு முயற்சி இல்லாமல், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்குமா? என்று கேள்வி எழும் அளவுக்கு, கடந்த சில கூட்டங்களில் நிலைமை மோசமானது. அதுவும் கலெக்டர் முன்னிலையிலேயே தீக்குளிப்பு முயற்சி நடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் உஷாரான போலீசார், நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், சோதனையை கடுமையாக்கினர். மக்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில், உணவு பாத்திரங்கள், பை, கூடை என அனைத்தையும் சல்லடை போட்டு சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். இந்த கடும் சோதனையால் நேற்று தீக்குளிப்பு முயற்சி அரங்கேறவில்லை. இதேபோல் மக்களிடம் மனுக்களை பெறும் கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆகியோர், தீர்வு காணவும் முயன்றால், மக்கள் குறைதீர் கூட்டம் சம்பிரதாய
கூட்டமாக நடந்தேறுவது
முடிவுக்கு வரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X