சத்தியில் இரவில் இருவேறு விபத்து பிக்-அப் வேன்கள் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

Added : செப் 06, 2022 | |
Advertisement
சத்தி பகுதியில், இரவில் இருவேறு இடங்களில், பிக்-அப் வேன்கள் கவிழ்ந்த விபத்தில், பெண்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், 25 பேர், ராஜன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த கிடா விருந்துக்கு, பிக்கப் வேனில் சென்றனர். விருந்து முடிந்து இரவில் கெஞ்சனுார் வழியாக வீடு திரும்பினர். கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த சல்மான்,

சத்தி பகுதியில், இரவில் இருவேறு இடங்களில், பிக்-அப் வேன்கள் கவிழ்ந்த விபத்தில், பெண்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், 25 பேர், ராஜன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த கிடா விருந்துக்கு, பிக்கப் வேனில் சென்றனர். விருந்து முடிந்து இரவில் கெஞ்சனுார் வழியாக வீடு திரும்பினர். கோட்டு
வீராம்பாளையத்தை சேர்ந்த சல்மான், 24, வேனை ஓட்டினார்.
தாண்டாம்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது மோதி கவிழ்ந்தது. அனைவரும் காயமடைந்த நிலையில், இரு பெண்கள் தலையில் பலத்த காயம் அடைந்தனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும், மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டனர். போலீஸ் விசாரணையில் ஒட்டர்பாளையத்தை சேர்ந்த ஜோதி, 50; கொத்துகாட்டை சேர்ந்த கவிதா, 30; என்பது தெரிந்தது.
தற்போது, ௧௮ பேர் சத்தி தனியார் மருத்துவமனையிலும், கொத்துகாட்டை சேர்ந்த கலைவாணி, 38, கண்ணம்மாள், 60, கோவை தனியார் மருத்துவமனையிலும், கொத்துகாட்டை சேர்ந்த சுமதி, 21, அமுதா, 28, ரம்யா, 28, ஆகியோர், கோபி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தை சேர்ந்த, 15 பேர் நேற்று முன்தினம் இரவு, இக்கரைநெகமம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு டிரம்ஸ் அடித்து விட்டு, பிக்-அப் வேனில் வீட்டுக்கு திரும்பினர். சிக்கரசம்பாளையம் புதுாரை சேர்ந்த பிரபாகரன் வேனை ஓட்டினார். சத்தி, நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே, நிலை தடுமாறி வேன் கவிழ்ந்ததில், 15 பேரும் துாக்கி வீசப்பட்டனர். அனைவரும் சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீசுக்ரன், 18, இறந்து விட்டார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X