அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபிேஷக யாக பூஜை தொடக்கம்| Dinamalar

அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபிேஷக யாக பூஜை தொடக்கம்

Added : செப் 06, 2022 | |
அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, முதற்கால யாக பூஜை தொடங்கியது.சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை ஐங்கரன் வேள்வி, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் நடந்தது.மாலை, கலாகர்ஷணம், திருக்குடங்களை இடமாக கொண்டு எழுந்தருளிய சுவாமிக்கு வேள்வி சாலைக்கு எழுந்தருளல், இரவு, முதற்கால யாக


அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, முதற்கால யாக பூஜை தொடங்கியது.
சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை ஐங்கரன் வேள்வி, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் நடந்தது.
மாலை, கலாகர்ஷணம், திருக்குடங்களை இடமாக கொண்டு எழுந்தருளிய சுவாமிக்கு வேள்வி சாலைக்கு எழுந்தருளல், இரவு, முதற்கால யாக பூஜை, 108 திரவியம் வழிபாடு, திருமுறை, திருவடி விண்ணப்பம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்று காலை, நினைவு திருமஞ்சனம், இரண்டாம் கால யாக பூஜை, விமான கலசம் நிறுவுதல், மாலை மூன்றாம் கால யாக பூஜை, இரவு, மூலத்திருமேனிகளுக்கு எண்வகை மருந்து சாற்றல், பூர்ணாகுதி வழிபாடு நடக்கிறது.
நாளை காலை, 7:40 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 9:15 மணிக்கு திருக்குடங்கள் புறப்படு, 9:45 முதல் 10:15 மணிக்குள் விமானத்திற்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து விநாயகர், முருகர், அப்பாபைத்தியம் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம், 11:00 மணிக்கு திருமஞ்சனம், அலங்கார வழிபாடு, பதின்மங்கல காட்சி, மதியம், 12:30 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X