தொடர் மழையால் ஏற்காட்டில் வைரஸ் காய்ச்சல் கொசுவால் 'டெங்கு' பரவும் அபாயம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. இதனால் இப்பகுதியில் சளி மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துள்ளனர். மேலும், மழை நீர் தேங்கியுள்ளதால், அதில் டெங்கு கொசு உருவாகும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீதோஷ்ண நிலை மாறி,


ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. இதனால் இப்பகுதியில் சளி மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துள்ளனர். மேலும், மழை நீர் தேங்கியுள்ளதால், அதில் டெங்கு கொசு உருவாகும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீதோஷ்ண நிலை மாறி, வெயில் மழை மாறி மாறி வருவதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர், ஏராளமானோருக்கு சளி மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. மேலும், பரவி வருகிறது.
ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இது குறித்து ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் கூறியதாவது:
ஏற்காட்டில் தற்போது மழை மற்றும் வெயில் மாறி மாறி வந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் தாமாக மருந்துகளை வாங்கி பயன்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். சுகாதாரமான தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும். வீட்டில் அக்கம் பக்கத்தில் சுத்தமான மழைநீர் தேங்குவதால் அந்த தண்ணீரில் டெங்கு கொசு உருவாகி டெங்கு நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சுற்றுப்புறத்தில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வோண்டும்.
இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X