இடைப்பாடியில் நாயன்மார்கள் ஊர்வலம்| Dinamalar

இடைப்பாடியில் நாயன்மார்கள் ஊர்வலம்

Added : செப் 06, 2022 | |
நாயன்மார்கள் ஆண்டு விழாவையொட்டி இடைப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்கள் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது.இடைப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்கள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் ஆண்டு குருபூஜை விழா கடந்த, 3ல் தொடங்கியது. மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நஞ்சுண்டேஸ்வரர்


நாயன்மார்கள் ஆண்டு விழாவையொட்டி இடைப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்கள் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது.
இடைப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்கள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் ஆண்டு குருபூஜை விழா கடந்த, 3ல் தொடங்கியது. மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.
முதல் நாள் நடந்த நிகழ்ச்சியில் இடைப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் இருந்து நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை சென்னையை சேர்ந்த ஒளியரசு சுவாமிகள் தலைமையேற்று நடத்தினார். தினமும் காலை, மாலை வேளைகளில் வீணை வாசித்தல், சிவனடியார் கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியின் இறுதிநாளான நேற்று புஷ்ப அலங்காரத்தில் நாயன்மார்கள், 9 தொகை அடியார்கள், 4 சந்தன குறவர்கள், ஒரு பிச்சாடனர் என, 76 சிலைகள் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தொடங்கி, கடைவீதி, அங்காளம்மன் கோவில் தெரு, பவானி ரோடு பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் கோவில் வாளகம் வரை நேற்று ஊர்வலம் கொண்டு வரப்பட்டது.
சிவனடியார் திருக்கூட்ட தலைவர் கணேசன், செயலர் முருகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X