நாளை கும்பாபிஷேக விழா சுகவனேஸ்வரர் கோவில் ராஜகோபுர கலசம் ஊர்வலம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ராஜகோபுரங்களுக்கு கலசம் பொருத்தப்பட்டது.சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த, 1ம் தேதி பூஜை தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, முதல் கால யாக பூஜை, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், சோம கும்ப பூஜை, விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை


சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ராஜகோபுரங்களுக்கு கலசம் பொருத்தப்பட்டது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த, 1ம் தேதி பூஜை தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, முதல் கால யாக பூஜை, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், சோம கும்ப பூஜை, விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.
பின்னர் மகா தீபாராதனை நடந்தது.
நேற்று யாக பூஜை நடைபெறும் இடத்தில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. உபயதாரர்கள் மூலம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 17 தங்க முலம் பூசப்பட்ட கலசம், 4 சாதாரண கலசம் என 21 கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பூஜைக்கு பின் ராஜகோபுரங்கள், சுவாமி விமானங்களுக்கு கலசங்கள் பொருத்தப்பட்டன.
மாலை, இரண்டாம் கால யாக பூஜை, மூலமந்த்ராதி ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. மேலும் ஸ்வர்ணாம்பிகை அம்மன், சுகவனேஸ்வரர் சுவாமிக்கு ஆதிலிங்கம் உள்பட, 8 வகையான பொருட்களால் தயார் செய்யப்பட்ட அஷ்டபந்தன மருந்து சாத்துப்படி செய்யப்பட்டது.
இன்று காலை, 8:00 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை, மாலை, 5:00 மணிக்கு மேல் ஐந்தாம் கால யாக பூஜை, நாளை, காலை ஆறாம் கால யாக பூஜை, காலை, 10:50 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 11:15 மணிக்கு சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு கும்பாபிஷேகம், மாலை, திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா, சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மங்கையர்கரசி, கோவில் உதவி கமிஷனர் சரவணன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X