புதுடில்லி மதுபான மோசடி: அமலாக்கத்துறை சோதனை

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை குறித்த விவகாரத்தில் பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.டில்லியில் மதுபான விற்பனை உரிமம் வழங்குவது தொடர்பான புதிய கொள்கையை 2021- 22 ல் மாநில அரசு வெளியிட்டது. இதன்படி, தனியாருக்கும் உரிமம் வழங்கப்படும். இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது
delhi, excise policy, ed, enforcement directorate, raid,

புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை குறித்த விவகாரத்தில் பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டில்லியில் மதுபான விற்பனை உரிமம் வழங்குவது தொடர்பான புதிய கொள்கையை 2021- 22 ல் மாநில அரசு வெளியிட்டது. இதன்படி, தனியாருக்கும் உரிமம் வழங்கப்படும். இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கொள்கையை புதுடில்லி அரசு திரும்ப பெற்றது. கலால்துறையை கவனிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. சமீபத்தில் சிசோடியாவின் வீடு மற்றும் அவருடைய வங்கி லாக்கரை சி.பி.ஐ., சமீபத்தில் சோதனை நடத்தியது. சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு அடிப்படையில், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி , உ.பி., மும்பை, ஐ தராபாத், பரீதாபாத் மற்றும் கூர்கான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. டில்லி அரசின் ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கையில் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.latest tamil newsஅதேநேரத்தில், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

rsudarsan lic - mumbai,இந்தியா
06-செப்-202216:14:03 IST Report Abuse
rsudarsan lic ஏதோ நாட்டில் எந்த மாநிலத்திலும் மது விற்பனை இல்லாத மாதிரி குறிவைத்து இயங்கும் மத்திய அரசு.
Rate this:
jayvee - chennai,இந்தியா
06-செப்-202218:24:48 IST Report Abuse
jayveeகாரணம் அதுவல்ல.. தனியாருக்கு தாரைவாரதுதான் விஷயம்.....
Rate this:
Cancel
06-செப்-202214:35:33 IST Report Abuse
ராமகிருஷ்ணன் கெஜ்ரிவால் யோக்கியன் வேஷம் போடும் ஹைடெக் களவாணி.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-செப்-202213:24:46 IST Report Abuse
Ramesh Sargam புதுடில்லி மதுபான மோசடி. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இதை எல்லாம் மறந்துவிட்டு, நேற்று தமிழக பயணம் மேற்கொண்டுள்ளார். எதற்கு தெரியுமா? - தமிழகத்தில் 'டில்லி மாடல் பள்ளிகள்' திட்டம்: துவக்கி வைத்தார் கெஜ்ரிவால் - அது எப்படிப்பட்ட மாடல் பள்ளிகளாக இருக்கும் என்று நீங்களே முடிவு எடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X