சேலம் மாவட்டத்தில் 'புதுமைப்பெண் திட்டம்' 872 மாணவியருக்கு தலா ரூ.1,000 வழங்கல்

Added : செப் 06, 2022 | |
Advertisement
புதுமைப்பெண் திட்டத்தில், 872 மாணவியருக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம், அ.தி.மு.க.,ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றப்பட்டது. தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும், தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், பள்ளி படிப்புக்கு பின், உயர் கல்வி


புதுமைப்பெண் திட்டத்தில், 872 மாணவியருக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம், அ.தி.மு.க.,ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றப்பட்டது. தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும், தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், பள்ளி படிப்புக்கு பின், உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் படி அரசு பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில், மாதம் தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று சென்னையில், 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார். சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட துவக்க விழா, பெரியார் பல்கலையில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள, 17 கல்லுாரியில் பயிலும், 872 மாணவியருக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்கி திட்டம் துவங்கப்பட்டது. சேலம் மேயர் ராமசந்திரன், எம்.பி.,பார்த்திபன், எம்.எல்.ஏ.,க்கள் சேலம் வடக்கு ராஜேந்திரன், சேலம் மேற்கு அருள், மேட்டூர் சதாசிவம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஆன்-லைன் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X