கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் சுரேஷ் ரெய்னா

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டிற்காகவும், எனது மாநிலமான உ.பி.,க்காகவும் விளையாடியது பெருமை அளிக்கிறது. கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த பிசிசிஐ, உ.பி.,
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் சுரேஷ் ரெய்னா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டிற்காகவும், எனது மாநிலமான உ.பி.,க்காகவும் விளையாடியது பெருமை அளிக்கிறது. கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த பிசிசிஐ, உ.பி., கிரிக்கெட் சங்கம், சென்னை அணி, ராஜிவ் சுக்லா மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ரெய்னா கூறியுள்ளார்.


latest tamil news



கடந்த 2020 ஆக.,15ல் சர்வதேச போட்டிகளில் இருந்து இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்ற சில மணி நேரங்களில் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். பிறகு ஐ.பி.எல்., போட்டிகளில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமீரேட்சில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் போது பாதியிலேயே தாயகம் திரும்பினார். தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஏலத்தின் போது சென்னை அணியில் இருந்து ரெய்னா விடுவிக்கப்பட்டார்.



இச்சூழ்நிலையில், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள ரெய்னா, வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்தியாவிற்காக அல்லது உள்நாட்டு அணிக்காக பங்கேற்றால், வெளிநாட்டு அணிகளில் பங்கேற்க முடியாது என்பதால் அவர் ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிகிறது. அடுத்தாண்டு துவங்கும் தென் ஆப்ரிக்கா டுவென்டி 20 தொடரில் அவர் பங்கேற்கக்கூடும் என தெரிகிறது.



இந்திய அணி சார்பில் ரெய்னா 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒரு நாள் போட்டிகள், 78 டுவென்டி -20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2011ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் ரெய்னா இடம்பெற்றிருந்தார். ரெய்னா கடைசியாக, 2021ல் அபுதாபியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

MANI DELHI - Delhi,இந்தியா
06-செப்-202216:12:06 IST Report Abuse
MANI DELHI பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் போனார்கள். ஒருகாலத்தில் மும்பை லாபி தான் வீரர்களை முடிவு செய்தது. ஒரு 15 ஆண்டுகளாக தான் மாற்ற மாநில வீரர்களுக்கு வாய்ப்பு கிட்டியது. நடராஜன் இடக்கை பந்து வீச்சாளர். இந்தியாவில் இடக்கை பந்து வீச்சாளர்கள் கிடைப்பதே அபூர்வம். ஆனால் வாய்ப்புகளை தருவதில்லை. அப்படி ஒடுக்கப்பட்ட வீரர் தான் இவர். வெளிநாட்டில் விளையாட முடிவு எடுத்திருப்பது இன்னும் இவரிடம் நிறைய கிரிக்கெட் உள்ளதை தான் காட்டுகிறது....
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
06-செப்-202214:28:29 IST Report Abuse
vadivelu அஷ்வினும் இதை செய்து விட்டு மற்ற நாடுகளில் நடக்கும் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
Rate this:
Cancel
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
06-செப்-202213:36:20 IST Report Abuse
Neutrallite நல்ல வீரர். தனக்காக விளையாடாமல் அணிக்காகவே விளையாடியவர். அதனால் தோனியின் நிழலாக இருந்தவர். இவர் காலத்தில் இருந்த போது மற்ற வீரர்கள் விக்கெட் எடுத்தாலோ கேட்ச் பிடித்தாலோ முதல் பாராட்டு அநேகமாக இவரிடம் இருந்து தான் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X