மதுரை டூ கோவை நேரடி எக்ஸ்பிரஸ்: பயணிகள் மகிழ்ச்சி

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை - பழநி மற்றும் பழநி - கோவை இடையே இயக்கப்பட்டு வந்த 2 எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை இணைத்து மதுரை - கோவை இடையே நேரடி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களாக தெற்கு ரயில்வே இயக்கியது. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக பலரும் மகிழச்சி தெரிவித்துள்ளனர்.இந்த சிறப்பு ரயில்கள், மதுரை - கோவை இடையே முன்பதிவில்லாத ஒரே விரைவு ரயிலாக இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த
மதுரை டூ கோவை, எக்ஸ்பிரஸ், ரயில், பயணிகள், மகிழ்ச்சி

மதுரை - பழநி மற்றும் பழநி - கோவை இடையே இயக்கப்பட்டு வந்த 2 எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை இணைத்து மதுரை - கோவை இடையே நேரடி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களாக தெற்கு ரயில்வே இயக்கியது. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக பலரும் மகிழச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த சிறப்பு ரயில்கள், மதுரை - கோவை இடையே முன்பதிவில்லாத ஒரே விரைவு ரயிலாக இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இந்த முன்பதிவில்லாத விரைவு ரயில் (எண் 16722), இயக்கப்படுகிறது. மதுரையில் காலை 7:25 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 12:45 மணிக்கு கோவை சென்றடையும். மறு மார்க்கத்தில் கோவை - மதுரை விரைவு ரயில் (16721) கோவையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு புறப்பட்டு இரவு 7:35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மொத்தம் 14 பெட்டிகள் உடைய இந்த ரயில், கூடல் நகர், சமயநல்லுார், சோழவந்தான், வாடிப்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உட்பட, 19 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
12-செப்-202210:49:59 IST Report Abuse
S Ramkumar வெங்கடேசன பேச சொல்லு. எப்ப பாத்தாலும் நீட்டு சுயாட்சி, கீழடி என்று புலம்பாமல் தேர்ந்தெடுத்ததற்கு தக்க கேரளா காரர்களோடு போட்டி போட்டு தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களை கொண்டு வர சொல்லுங்கள்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-செப்-202212:24:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது மதுரையில் காலை 6:00 மணிக்கு கிளம்பி கோவைக்கு 11:30 க்கு வந்து, பிறகு ஒரு 4:00 மணிக்கு கிளம்பி இரவு 9:30 க்கு மதுரை வந்து சேர்ந்தால் வியாபாரிகளுக்கு மிக பயனுள்ளதாக அமையும். இதன் பிரதிபலிப்பாக கோவையில் இருந்து காலையிலும், மதுரையில் இருந்து மாலையிலும் ரயில்களை விட்டு, ஏசி சேர் கார் வசதி செய்தால் முழு கொள்ளளவில் சூப்பர் லாபகரமான தடமாக அமையும். செய்யமாட்டாங்க. தனியாருக்குன்னா தாரை வார்க்க ஓடி வருவானுங்க. பத்துகோடி ரூபா பாஜாகாக்கு நிதி கொடுத்தா அடுத்த நொடியில் சீரடிக்கு, தேரடிக்குன்னு ரயில் விட அனுமதி கிடைக்கும். (this is true)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X