சேலம் வழியாக ஓணம் சிறப்பு ரயில்கள்

Added : செப் 06, 2022 | |
Advertisement
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம், கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.ஒணம் பண்டிகை, வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கேரளாவுக்கு செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் - ஹைதராபாத் இடையே, வண்டி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம், கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
ஒணம் பண்டிகை, வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கேரளாவுக்கு செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் - ஹைதராபாத் இடையே, வண்டி எண்:07120 எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து, வரும், 10ம் தேதி இயக்கப்படும். இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக பயணிக்கும்.
யஷ்வந்த்பூர் - கொல்லம் இடையேயான வண்டி எண்:06501 சிறப்பு ரயில், நாளை மதியம், 1:00 மணிக்கு யஷ்வந்த்பூரில் புறப்படும். மறுமார்க்கத்தில், கொல்லம் - யஷ்வந்த்பூர் இடையேயான வண்டி எண்:06502 கொல்லத்தில் இருந்து வரும், 8ம் தேதி இரவு, 10:00 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கனுார் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையேயான(வண்டி எண்:06053) சிறப்பு ரயில், நாளை இரவு, 11:30 மணிக்கு புறப்படும்.
இதேபோல, மறுமார்க்கத்தில், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையேயான வண்டி எண்: 06054 எர்ணாகுளத்தில் இருந்து வரும், 9ம் தேதி மதியம், 2:20 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
இதேபோல, திருநெல்வேலி - பெங்களூரு இடையேயான வண்டி எண்: 06052 சிறப்பு ரயில், வரும், 10ம் தேதி காலை, 8:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.
இந்த ரயில், பாலக்காடு, கோவை, சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X