சின்னார் ரக நெல்அனைத்து பருவத்திற்கும் ஏற்றது

Added : செப் 06, 2022 | |
Advertisement
சின்னார் ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:பாரம்பரிய நெல்லில், சின்னார் ரகமும் ஒன்று. 125 நாளில் விளைச்சல் தரக்கூடிய, மத்திய சன்ன ரகம்.பாரம்பரிய ரக நெல் போல், குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்து
சின்னார் ரக நெல்அனைத்து பருவத்திற்கும் ஏற்றது

சின்னார் ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:

பாரம்பரிய நெல்லில், சின்னார் ரகமும் ஒன்று. 125 நாளில் விளைச்சல் தரக்கூடிய, மத்திய சன்ன ரகம்.பாரம்பரிய ரக நெல் போல், குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்ய ஏற்றது.மேலும், மழை மற்றும் புயலுக்கு தாங்கி வளரக்கூடிய சிறந்த நெற்பயிர். நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை.அறுவடை செய்த பின், கதிரில் இருந்து நெல் பிரிப்பது சிரமம் ஏற்படும்.

இதை தவிர்க்க, கதிர்களை வெயிலில் உலர்த்திய பின் கதிரடிக்க வேண்டும். அப்போது, கதிரில் இருந்து நெல் எளிதாக பிரியும்.ஒரு ஏக்கரில், சின்னார் ரக நெல் சாகுபடி செய்தால், 30 மூட்டை விளைச்சல் தரும். இது, மற்ற பாரம்பரிய ரக நெல்லில் கிடைக்கும் மகசூலைவிட கூடுதலாகும். இந்த அரிசி, சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் உடையோர் சாப்பிட்டால், நோய் தன்மை கட்டுப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:என்.மகாலட்சுமி,98414 42193

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X