10 கோடியை தாண்டியது 'டிமேட்' கணக்கு எண்ணிக்கை

Added : செப் 06, 2022 | |
Advertisement
புதுடில்லி:இந்தியாவில் 'டிமேட்' கணக்குகளின் எண்ணிக்கை, 10 கோடியைத் தாண்டி, புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு, எப்படி நமக்கு ஒரு கணக்கு தேவைப்படுகிறதோ, அதே போல, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க - விற்க, டிமேட் கணக்கு தேவைப்படும். முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கினால், அதற்கு அடையாளமாக, ஷேர் சர்ட்டிபிகேட் கொடுப்பர். இந்த
10 கோடி, டிமேட் கணக்கு

புதுடில்லி:இந்தியாவில் 'டிமேட்' கணக்குகளின் எண்ணிக்கை, 10 கோடியைத் தாண்டி, புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு, எப்படி நமக்கு ஒரு கணக்கு தேவைப்படுகிறதோ, அதே போல, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க - விற்க, டிமேட் கணக்கு தேவைப்படும். முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கினால், அதற்கு அடையாளமாக, ஷேர் சர்ட்டிபிகேட் கொடுப்பர். இந்த சான்றிதழை கொடுப்பதிலும், பெறுவதிலும், பலவிதமான அசவுகரியங்கள் இருந்தன.
மேலும், இந்த சான்றிதழ்கள் காகிதத்தில் அச்சிடப்பட்டவை என்பதால், தொலைந்து போகவோ அல்லது கிழிந்து போகவோ வாய்ப்புண்டு. இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், மின்னணு வடிவில் பங்குகளை இருப்பில் வைத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் ஆனது. பங்குகளை மின்னணு வடிவில் நாம் இருப்பில் வைத்துக்கொள்வதற்கான கணக்கு தான், டிமேட் கணக்கு.
பங்குச் சந்தையில் சில்லரை முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, டிமேட் கணக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆகஸ்டில், சாதனை அளவாக 10 கோடியை தாண்டி உள்ளது.இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும், பங்குச் சந்தை முதலீடு குறித்து, சில்லரை முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதன் அடையாளமே இது என்கின்றனர், நிபுணர்கள்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X