முதலீடை திருப்பிக் கொடுக்காத தனியார் நிதி நிறுவனம் மீது புகார்

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழியில் முதலீடு செய்த பணத்தை திருப்பி தராத தனியார் நிதி நிறுவனம் மீது வணிகர்கள், பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே அமுதசுரபி என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வணிகர்கள் மற்றும்
முதலீடை திருப்பிக் கொடுக்காத  தனியார் நிதி நிறுவனம் மீது புகார்

மயிலாடுதுறை: சீர்காழியில் முதலீடு செய்த பணத்தை திருப்பி தராத தனியார் நிதி நிறுவனம் மீது வணிகர்கள், பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே அமுதசுரபி என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர். குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு தங்களது முதலீட்டை அமுதசுரபி நிதி நிறுவனம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளது. பலமுறை நிதி நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அமுதசுரபி நிதி நிறுவனம் அறிவிப்பு எதுவும் இன்றி மூடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டு வந்து நிதி நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
07-செப்-202207:25:49 IST Report Abuse
Dharmavaan எல்லாவற்றுக்கும் மூல காரணம் நீதித்துறையின் செயல்பாடே .ஏமாற்றுபவன் கைதாகி ஜாமீனில் வந்துவிட்டால் இது முடிய பல வருடங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X