வீட்டு வசதி வாரிய திட்டங்களில் பட்டா பெற முடியாமல் சிக்கல்!| Dinamalar

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் பட்டா பெற முடியாமல் சிக்கல்!

Added : செப் 06, 2022 | |
சென்னை:வீட்டு வசதி வாரிய திட்டங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான பட்டா பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.தவணைஇத்திட்டங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தவணை முழுவதையும் செலுத்தி விற்பனை பத்திரம் பெற வேண்டும்.தவணை முடித்து

சென்னை:வீட்டு வசதி வாரிய திட்டங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான பட்டா பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


தவணை


இத்திட்டங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தவணை முழுவதையும் செலுத்தி விற்பனை பத்திரம் பெற வேண்டும்.தவணை முடித்து விற்பனை பத்திரம் பெற்றவர்கள், அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு விற்கவோ, அதில் வீடுகள் கட்டவோ எந்த தடையும் இல்லை.

இதற்காக, மனை ஒதுக்கீட்டாளர்கள், சம்பந்தப்பட்ட துறைகளை அணுகும் போது, அந்த நிலத்துக்கான பட்டா கேட்கப்படுகிறது.சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை ஒட்டிய புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி, மனைப்பிரிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த புறம்போக்கு நிலங்கள், வாரியத்தின் பெயருக்கு வருவாய் துறையால் ஒப்படைக்கப் பட்டவை.இதன் அடிப்படையில், வீட்டுவசதி வாரியம் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. ஆனால், இந்த நிலங்களுக்கு பட்டா வழங்குவதில், நில நிர்வாக ஆணையர் தான் முடிவு செய்ய வேண்டும்.


அலைக்கழிப்பு


இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டாளர்கள் கூறியதாவது:தவணை முடிந்த நிலையில், வாரிய நிர்வாகம் விற்பனை பத்திரங்களை வழங்கி விட்டது. தற்போது, கட்டட அனுமதி நடைமுறைகளில், பட்டா பிரதியை ஆதாரமாக அளிக்க வேண்டியுள்ளது. வங்கிக்கடன் போன்ற விஷயங்களுக்கும் பட்டா அவசியம்.

இந்த நிலங்களுக்கு பட்டா வழங்க, உரிய கோப்புகள் வாரியத்திடம் இருந்து, நில நிர்வாக ஆணையருக்கு சென்றன. பின், நில நிர்வாக ஆணையர் ஒப்புதலுடன் வருவாய் துறைக்கு சென்றுள்ளன. தாலுகா அலுவலகங்களை அணுகி னால், வருவாய் துறை அதிகாரிகள் பட்டா வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.

குறிப்பாக, சென்னையில் கொரட்டூர், முகப்பேர், அம்பத்துார்; கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பட்டா வழங்க அலைக்கழிக்கின்றனர்.அரசு உரிய அனுமதி வழங்கி, பட்டா வழங்குவதில் ஏற்படும் அலைக்கழிப்புகள், மக்களை அதிருப்தி அடைய செய்கிறது. உயரதிகாரிகள் தலையிட்டால் தான் இதற்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X