ரேஷன் கார்டுகளில் 20 ஆயிரம் பேர் நீக்கம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
சென்னை:தமிழக ரேஷன் கார்டுகளிலும், பிற மாநில கார்டுகளிலும் உறுப்பினராக உள்ள, 20 ஆயிரம் பெயர்களை, உணவு வழங்கல் துறை நீக்கியுள்ளது.தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.பொருளாதார நிலை, வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில், ஒவ்வொரு

சென்னை:தமிழக ரேஷன் கார்டுகளிலும், பிற மாநில கார்டுகளிலும் உறுப்பினராக உள்ள, 20 ஆயிரம் பெயர்களை, உணவு வழங்கல் துறை நீக்கியுள்ளது.

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.பொருளாதார நிலை, வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த்யோதயா, முன்னுரிமை அரிசி, முன்னுரிமை அற்ற அரிசி, முன்னுரிமையற்ற சர்க்கரை, எந்த பொருளும் வாங்காத பிரிவுகளின் கீழ், கார்டுகள் வழங்கப்படுகின்றன.தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் முன்னுரிமை கார்டுகளில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா, 5 கிலோ அரிசியும்; அந்தியோதயா பிரிவுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.

இதனால் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுகள், 'ஆதார்' எண் அடிப்படையில் வழங்கப் படுகிறது.தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் உறுப்பினர்களாக இடம்பெற்றிருக்கும், 1.34 லட்சம் பேர் பிற மாநிலங்களிலும் உள்ள கார்டுகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த இருமுறை பதிவு விபரங்களை கண்டறிந்த மத்திய உணவு துறை, தமிழக அரசின் உணவு வழங்கல் துறைக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், 1.34 லட்சம் உறுப்பினர்களிடம் விசாரணை செய்ததில், இரு முறை பதிவு உறுதி செய்யப்பட்டது. அதில், 20 ஆயிரம் உறுப்பினர்களின் பெயர்கள், தமிழக ரேஷன் கார்டுகளில் இருந்து உணவு வழங்கல் துறை நீக்கியுள்ளது.மீதியுள்ள 1.14 லட்சம் பேர், பிற மாநில கார்டுகளில் உறுப்பினர்களாக இருக்க விருப்பம்தெரிவித்துள்ளனர்.எனவே, அவர்களின் பெயர்களை நீக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X