இருவருக்கு காப்பு| Dinamalar

இருவருக்கு 'காப்பு'

Added : செப் 06, 2022 | |
பள்ளிப்பட்டு:காரில் மோதுவது போல் வந்ததை தட்டிக் கேட்டவர் மீது, தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.பள்ளிப்பட்டு நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன், 45. இவர், கடந்த 3ம் தேதி, பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது காரில் வந்த கும்பல், இவர் மீது மோதுவது போல் காரை ஓட்டி வந்தனர். இதை தியாகராஜன்

பள்ளிப்பட்டு:காரில் மோதுவது போல் வந்ததை தட்டிக் கேட்டவர் மீது, தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன், 45. இவர், கடந்த 3ம் தேதி, பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது காரில் வந்த கும்பல், இவர் மீது மோதுவது போல் காரை ஓட்டி வந்தனர். இதை தியாகராஜன் தட்டிக் கேட்டார்.அதன் பின் அந்த கும்பல், தியாகராஜன் மீது தாக்குதல் நடத்தியது.


இது குறித்த தியாகராஜன், பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, நேற்று முன்தினம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த 'டாஸ்மாக்' ஊழியர் ரவிகுமார், 41, மற்றும் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், 31, ஆகிய இருவரை கைது செய்தனர்.மேலும், சென்னையை சேர்ந்த வினோத், 37, இளங்கோ, 28, ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X