போலீஸ் டைரி...:திருவள்ளூர்

Added : செப் 06, 2022 | |
Advertisement
புகையிலை பொருள் பறிமுதல்திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீசார், ராமாபுரம், புட்லுார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். இதில், ராமாபுரம் மதுரை, 68, என்பவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை மற்றும் போதைப் பாக்குகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.நடத்துனர் மீது

புகையிலை பொருள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீசார், ராமாபுரம், புட்லுார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். இதில், ராமாபுரம் மதுரை, 68, என்பவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை மற்றும் போதைப் பாக்குகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நடத்துனர் மீது தாக்குதல்பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை பணிமனையில், தடம் எண்: டி52 என்ற பேருந்தின் நடத்துனர் ஈஸ்வரன். இவர், நேற்று முன்தினம், பணிமனையில் இருந்து பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பணியில் இருந்தார். பேருந்து, நல்லதண்ணீர்குளம் தெரு அருகே வந்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், 21, என்பவர், பேருந்தை வழிமறித்து, நடத்துனரை தாக்கினார்.
தன்னை பார்த்ததும் பேருந்தை நிறுத்த வேண்டும் என மிரட்டினார். இது குறித்து ஈஸ்வரன் அளித்த புகாரின்படி, பொதட்டூர்பேட்டை போலீசார், நீலகண்டனை தேடி வருகின்றனர்.
தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பாலேஸ்வரம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி, 54, விவசாயி. நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டு இருந்தார்.இவரது இரண்டாவது மகள் நதியா, பிரசவத்திற்காக இவரது வீட்டிற்கு வந்திருந்தார். அவரும், அவரது கணவர் மணிகண்டனும் வீட்டின் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்தனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் ஹாலில் இருந்த, பீரோ திறந்து இருந்த நிலையில் அதில் இருந்த, 15 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து முனுசாமி அளித்த புகாரையடுத்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தீப்பற்றி எரிந்த பைக்
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சேகர். நேற்று முன்தினம், பணி நிமித்தமாக கொசவன்பேட்டை தொடக்கப் பள்ளி கேட்டின் முன், 'டிவிஎஸ் ஸ்கூட்டி' பைக்கை நிறுத்திவிட்டு சென்றார்.பின், திரும்பி வந்து பார்த்தபோது, பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்டார். தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனாலும், பைக் எரிந்து விட்டது. இதுகுறித்து சேகர், பெரியபாளையம் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, பைக் எப்படி எரிந்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
பெண் மர்ம சாவு: சகோதரர் புகார்
ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி, ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன், 29. இவரது சகோதரி சங்கீதா, 24. இவருக்கும், நல்லாங்காவனுார் கிராமத்தில் வசிக்கும் விஜயன் என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாலை விஜயனின் மாமா, போன் வாயிலாக தொடர்பு கொண்டு சங்கீதா இறந்து விட்டதாக கூறினார்.நேரில் சென்று பார்த்தபோது, சங்கீதா இறந்து கிடந்தார். இதுகுறித்து சரவணன், வெங்கல் போலீசில், தன் தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறினார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு கோரப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X