வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்எஸ்.பி.,யிடம் பெண் புகார்| Dinamalar

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்எஸ்.பி.,யிடம் பெண் புகார்

Added : செப் 06, 2022 | |
திருவள்ளூர்:கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகள் அன்பரசி, 25. தனியார் பள்ளி ஆசிரியை.இவர், 2020ல், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த சின்னக்களக்காட்டூர் பகுதியைச்

திருவள்ளூர்:கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகள் அன்பரசி, 25. தனியார் பள்ளி ஆசிரியை.இவர், 2020ல், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த சின்னக்களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், 30, என்பவரை முகநுால் மூலம் அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


அப்போது வரதட்சணையாக, 1.30 லட்சம் ரூபாய் ரொக்கம், 7 சவரன் நகையாக கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.பின், அன்பரசி பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்குச் சென்றார். சில மாதங்களுக்கு முன், அன்பரசிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.கணவர் குழந்தை பார்க்க வராததால், கடந்த மாதம் முன், அன்பரசி குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.


அப்போது கூடுதலாக வரதட்சணை கேட்டும் துன்புறுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.பின், அன்பரசி திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், நேற்று, மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார். எஸ்.பி., சீபாஸ் கல்யாண் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X