ராமநாதபுரம் வைகை பாசன தண்ணீரை பெற நடவடிக்கை

Added : செப் 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கான வைகை பாசன தண்ணீரை முழுமையாக பெற்றுத்தர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் புதிய மிளகாய் வணிக வளாகம் திறப்பு விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது:குளிர்சாதன வசதியுடன் மிளகாய் கிட்டங்கி உள்ளது. 65 கடைகளை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கான வைகை பாசன தண்ணீரை முழுமையாக பெற்றுத்தர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.

ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் புதிய மிளகாய் வணிக வளாகம் திறப்பு விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது:குளிர்சாதன வசதியுடன் மிளகாய் கிட்டங்கி உள்ளது. 65 கடைகளை பயன்பாட்டிற்கு வந்த பின் அதன் செயல்பாட்டை பொறுத்து கூடுதலாக கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரத்தில் வேளாண் விற்பனைக்கூடம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை விரைவில் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயத்திற்குரிய பாசன தண்ணீர் வீணாகவில்லை, வைகை அணையில் இருந்து மாவட்டத்திற்கு வரும் உபரி நீர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ராமநாதபுரத்திற்குரிய பாசன தண்ணீர் குறித்து மாநில, மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டங்களில் கேட்கப்படும்.இதுதொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்டு வைகை பாசன தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.----------


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X