துருப்பிடித்த கம்பியில் பாலப்பணி; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

Added : செப் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் துருப்பிடித்த கம்பியில் மீன் இறக்கும் பாலம் கட்டும் பணி நடப்பதால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.மண்டபத்தில் விசைப்படகுகள் நிறுத்த பாதுகாப்பான துறைமுகம் இல்லாத நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சூறாவளிக்காற்றில் 17 படகுகள் சேதமடைந் தன. இதையடுத்துமீன்வளத்துறை சார்பில் மண்டபம் தெற்கு, வடக்கு
துருப்பிடித்த கம்பியில் பாலப்பணி; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் துருப்பிடித்த கம்பியில் மீன் இறக்கும் பாலம் கட்டும் பணி நடப்பதால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.

மண்டபத்தில் விசைப்படகுகள் நிறுத்த பாதுகாப்பான துறைமுகம் இல்லாத நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சூறாவளிக்காற்றில் 17 படகுகள் சேதமடைந் தன. இதையடுத்துமீன்வளத்துறை சார்பில் மண்டபம் தெற்கு, வடக்கு கடற்கரையில் ரூ.20 கோடியில் படகு நிறுத்தும் பாலம் கட்டும்பணி இரு ஆண்டுகளாக நடக்கிறது.

இப்பணியை 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்ட நிலையில் ஆமை வேகத்தில் பணி நடப்பதால் 50சதவீதம்பணிதான்முடிந்துள்ளது. கடற்கரையில் குவித்துள்ள கட்டுமான கம்பியில் துருப்பிடிக்காத வகையில் ரசாயனம் கலந்த பெயின்ட் பூசாமல் உள்ளதால், அனைத்து கம்பியும் துருப்பிடித்துள்ளன.

கட்டுமானப்பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிடாததால், துருப்பிடித்த கம்பிகளையே பாலம் கட்டுவதற்கு பயன் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே துருப்பிடித்த கம்பிகளை அகற்றிதரமான கம்பிகளைகட்டுமான பணிக்கு பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-202217:28:49 IST Report Abuse
அப்புசாமி அதிகாரிகளுக்கு துருப்பிடித்த , துருப்பிடிக்காத கம்பிகளுக்கு மிடையே உள்ள வித்தியாசமே தெரியாது. நமது சிவில் இஞ்சினீயர்கள் கல்லா கட்டத் தான் வேலைக்கு வருகிறார்கள். பாலங்கள் கட்டுவதற்கு அல்ல. இனிமே அதிகாரிகள் அலட்சியம்னு சொல்லி அவர்கள் தொழிலை கேவலப்படுத்தாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X