வெங்கத்துார் ஏரி சீரமைப்பு

Added : செப் 06, 2022 | |
Advertisement
மணவாள நகர்:மணவாள நகர் பகுதியில் உள்ள வெங்கத்துார் ஏரியில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், கரை மற்றும் மதகுகள் சீரமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பு கொண்ட வெங்கத்துார் ஏரி உள்ளது.இந்த ஏரி முட்புதர் சூழ்ந்து பராமரிப்பில்லாமல் கரைகள், மதகுகள் சேதமடைந்து மோசமான நிலையில்
வெங்கத்துார் ஏரி சீரமைப்பு

மணவாள நகர்:மணவாள நகர் பகுதியில் உள்ள வெங்கத்துார் ஏரியில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், கரை மற்றும் மதகுகள் சீரமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பு கொண்ட வெங்கத்துார் ஏரி உள்ளது.இந்த ஏரி முட்புதர் சூழ்ந்து பராமரிப்பில்லாமல் கரைகள், மதகுகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்படி, நீர்வளத் துறையினர் வெங்கத்துார் ஏரியை வருடாந்திர பராமரிப்பு திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கும் பணியை நேற்று துவக்கினர்.இதில் ஏரியின் கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து ஏரியில் உள்ள மதகுகள் சீரமைக்கும் பணியும் நடைபெறும் என நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X