பரமக்குடி வைகையில் கலக்கும் காவிரி குடிநீர்; அதிகாரிகள் மெத்தனம்| Dinamalar

பரமக்குடி வைகையில் கலக்கும் காவிரி குடிநீர்; அதிகாரிகள் மெத்தனம்

Added : செப் 06, 2022 | |
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து மாதக்கணக்கில் குடிநீர் ஆற்றில் வீணாகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் மக்களின் தாகம் தீர்க்கிறது. பரமக்குடி நகராட்சி முதல் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஆழ்குழாய் மற்றும் நீர் நிலை திட்டங்களும் முடங்கி உள்ளன. இதனால் காவிரி கூட்டு குடிநீரை நம்பியே
பரமக்குடி வைகையில் கலக்கும் காவிரி குடிநீர்; அதிகாரிகள் மெத்தனம்

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து மாதக்கணக்கில் குடிநீர் ஆற்றில் வீணாகிறது.



ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் மக்களின் தாகம் தீர்க்கிறது. பரமக்குடி நகராட்சி முதல் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஆழ்குழாய் மற்றும் நீர் நிலை திட்டங்களும் முடங்கி உள்ளன. இதனால் காவிரி கூட்டு குடிநீரை நம்பியே பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட மாவட்ட மக்கள் வாழும் நிலை உள்ளது.



இந்நிலையில், பரமக்குடி வழியாக முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ராட்சத குழாய் வைகை ஆற்று பாலம் பகுதியில் உடைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளாக அவ்வப்போது குழாய் உடைவதும், பின்னர் சீரமைப்பதுமாக உள்ளனர். ஒவ்வொரு முறையும் மாதக் கணக்கில் வீணாகும் குடிநீர் குறித்து 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.



தற்போது கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கசிவு அதிகமாகி சிறு அருவி போல் தண்ணீர் பெருக்கெடுத்து வைகை ஆற்றில் கலக்கிறது. இதனால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதனால் வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் செல்லும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் உடைப்பு மேலும் அதிகரிக்கும் நிலையில், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே தற்போதுள்ள நிலையில் உடைப்பை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X