ஒரே மரத்தில் தூக்கிட்டு இருவர் தற்கொலை

Added : செப் 06, 2022 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, சிலாவட்டம் பகுதியில் இருவர், ஒரே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தனர்.மதுராந்தகம் அருகே, சிலாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட கழனிவெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில், ஓர் ஆண், ஒரு பெண் என இருவர், ஒரே மரத்தில் துாக்கிட்டு தொங்குவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மதுராந்தகம் போலீசார் அங்கு சென்று, இரு சடலங்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக,

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, சிலாவட்டம் பகுதியில் இருவர், ஒரே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தனர்.

மதுராந்தகம் அருகே, சிலாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட கழனிவெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில், ஓர் ஆண், ஒரு பெண் என இருவர், ஒரே மரத்தில் துாக்கிட்டு தொங்குவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மதுராந்தகம் போலீசார் அங்கு சென்று, இரு சடலங்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மதுராந்தகம் போலீசார் கூறியதாவது:முதற்கட்ட விசாரணையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி, 23. சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி, 35. இருவரும் உறவினர்கள் தெரியவந்துள்ளது.கடந்த 4ம் தேதி இருவரும், வீட்டில் இருந்து மாயமாகி உள்ளதாக, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் மாயமான இருவரும், மதுராந்தகம் அருகே துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரமா தற்கொலை செய்தனரா அல்லது வேறு காரணமா என, தீர விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X