கன்டெய்னர் 'சீல்' அகற்றாமல் பொருள் கொள்ளை:4 பேர் கும்பல் கைது; ரூ.2.75 கோடி மதிப்பு பொருட்கள் பறிமுதல்

Added : செப் 06, 2022 | |
Advertisement
தாம்பரம்:வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை, கன்டெய்னர் லாரிகளில் இருந்து, 'சீல்' அகற்றாமல், நுாதன முறையில் திருடி, அவற்றை விற்று பணம் சம்பாதித்து வந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து, 2.75 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து, காலணி, கீ போர்ட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.தாம்பரம் சானடோரியத்தில், 'மெப்ஸ்' ஏற்றுமதி
கன்டெய்னர் 'சீல்' அகற்றாமல் பொருள் கொள்ளை:4 பேர் கும்பல் கைது; ரூ.2.75 கோடி மதிப்பு பொருட்கள் பறிமுதல்

தாம்பரம்:வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை, கன்டெய்னர் லாரிகளில் இருந்து, 'சீல்' அகற்றாமல், நுாதன முறையில் திருடி, அவற்றை விற்று பணம் சம்பாதித்து வந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து, 2.75 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து, காலணி, கீ போர்ட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தாம்பரம் சானடோரியத்தில், 'மெப்ஸ்' ஏற்றுமதி வளாகம் இயங்கி வருகிறது. அங்கு, 'பார்மா செல் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தில் இருந்து, ஆக., 18ல், 14 ஆயிரத்து, 400 கிலோ மருந்து பொருட்களை, கன்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பினர்.

இதற்கிடையில், கன்டெய்னர் லாரியில் இருந்து நுாதன முறையில் பொருட்கள் திருடப்பட்டதாக, நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. நிறுவனத்தின் அதிகாரிகள், சென்னை துறைமுகத்திற்கு சென்று, மருந்து பொருட்களை எடை போட்டனர். அதில், 4,800 கிலோ பொருட்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது.

பின், கன்டெய்னர் லாரியில் இருந்து, 'சீல்' உடைக்காமல், நுாதன முறையில், 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4,800 கிலோ பொருட்கள் திருடப்பட்டது குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி, தாம்பரம் துணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.


நுாதன திருட்டுகன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள், லாரி சென்ற இடங்களை வைத்து விசாரித்ததில், ஏழு பேர் கும்பல், நுாதன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுாரைச் சேர்ந்த சதீஷ்குமார், 27, நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளமாறன், 29, சென்னை, திருவெற்றியூரைச் சேர்ந்த கார்த்திக், 40, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முணியான்டி, 36, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

ராஜேஷ், சங்கர், சிவபாலன் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கும்பல், கன்டெய்னர்களில் உள்ள சீலை அகற்றாமல், சீலுக்கு மேல் மற்றும் கீழ் உள்ள அச்சாணிகளை அகற்றி, பொருட்களின் ஒரு பகுதியை திருடிவிட்டு, புதிய அச்சாணிகளை பொருத்தியுள்ளனர்.

திருடிய பொருட்களை, மீஞ்சூர் அருகேஉள்ள கவுண்டர்பாளையத்தில் பதுக்கி வைத்து, முனியாண்டி, ராஜேஷ் ஆகியோரிடம் விற்று, அதிக பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள்; ஆம்பூரில் இருந்து கன்டெய்னரில் எடுத்து செல்லப்பட்ட, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3,௦௦௦ ஜோடி காலணி.திருப்போரூரில் இருந்து கன்டெய்னரில் எடுத்து செல்லப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,100 'யமஹா கீ போர்ட்' என, 2.75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, இக்கும்பல் திருடியுள்ளது.

மேலும், இதே கும்பல், ஜூலை மாதம், ஆம்பூரில் இருந்து இத்தாலி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 1,800 ஜோடி காலணிகளையும்; ஆந்திர மாநிலம், தடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட, 1,000 காலணிகளையும் திருடியுள்ளது. இதையடுத்து, திருடப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், பாராட்டினார்.

இது குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது: இந்த கும்பல், கன்டெய்னர் லாரி ஓட்டுனர்களின் உதவியுடன், சீலை அகற்றாமல், நுாதன முறையில், ஏற்றுமதி பொருட்களை திருடி வந்துள்ளது. இது தெரியாமல், கன்டெய்னர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில், பொருட்களை இறக்குமதி செய்யும் போது, எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில மாதங்கள் கழித்தே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புகார் வந்துள்ளது. அதுபோன்ற நேரத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், பல துறைமுகங்களை கடந்து சென்றதால், எங்கு திருடப்பட்டது என்பது தெரியாமல், புகார் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.


நம்பகத்தன்மைஇதன்காரணமாகவே, பல திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்படவில்லை.இதை பயன்படுத்தி, இக்கும்பல் தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளது. உரிய நேரத்தில், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசாரின் நடவடிக்கையால், நுாதன முறை திருட்டு தடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், விலைஉயர்ந்த பொருட்களை கன்டெய்னர்களில் அனுப்பும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அந்த ஓட்டுனர்களின் நன்னடத்தை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் பொருட்களை அனுப்பி, வாகனம் செல்லும் பாதை மற்றும் உரிய நேரத்தில் செல்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வாகனத்தில் பாதுகாப்புக்காக ஊழியர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

2 மணி நேரத்திற்கு கமிஷன் ரூ.1 லட்சம்கன்டெய்னர் லாரி ஓட்டுனர்களும், நுாதன முறை திருட்டு கும்பலுக்கும் இடையே தொடர்பு உள்ளது. பெரிய நிறுவனங்களில் இருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிச் செல்லும் கன்டெய்னர் ஓட்டுனர்கள், திருட்டு கும்பலுக்கு தகவல் தெரிவிப்பர்.கன்டெய்னர் புறப்பட்டு சிறிது துாரம் சென்றதும், அதை மடக்கி கன்டெய்னரை மட்டும், திருட்டு கும்பல் எடுத்து செல்லும். பின், பொருட்களை திருடிவிட்டு, கன்டெய்னரை மீண்டும் எடுத்து வந்து, ஓட்டுனரிடம் ஒப்படைத்து விடுவர். இதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். அதற்காக, கன்டெய்னர் ஓட்டுனர்களுக்கு, கமிஷனாக, ௧ லட்சம் ரூபாயை, அந்த கும்பல் கொடுத்துள்ளது.புகாரை வாங்க மறுத்த போலீசார்

கன்டெய்னரில் இருந்து நுாதன முறையில் மருந்து பொருட்கள் திருடப்பட்டது குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் புகாரை வாங்காமல் அலைகழித்துள்ளனர். இதனால், அந்த நிறுவனத்தினர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து, புகார் அளித்தனர். பின், கமிஷனர் உத்தரவுப்படி புகார் பதிவு செய்யப்பட்டு,

'பலே' திருட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இல்லையெனில், இவ்வளவு பெரிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பாக, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கமிஷனர் பதில் கூறவில்லை. அதனால், இனி இதுபோன்று புகார் வாங்க மறுக்கும் போலீசார் மீது, கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X